குறைகளை நிறைகளாக பார்க்கலாமே !
Read Also: தூக்கத்தை தவிர்க்கும் உயிரினங்கள்
Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food
Read Also: வெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்-
எப்போதுமே நாம் எதை ஒன்றையாவது அடைய விரும்பி அது கிடைக்காத போது மனது வருத்தப்பட்டு ஏமாற்றம் குடிகொள்ளும். வெறுமையாக உணரலாம்.
வாழ்க்கை நமக்கு எப்போதுமே வெற்றியையும், சந்தோஷத்தையும், நல்ல அனுபவங்களை மட்டுமே கொடுக்குமானால் நாம் நிச்சயமாக ஒரு கோழையாகவே தான் இருப்போம்.
Read Also: தூக்கத்தை தவிர்க்கும் உயிரினங்கள்
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளையும், சிக்கல்களையும் , சவால்களையும் நேரம் நமக்கு உணர்த்தும் போதே நாம் நம்முடைய கால்களை தரையில் இறுக பற்றி வலுவாக நிற்க கற்று கொள்ள வேண்டும்.
எந்த அளவிற்கு நீ உன் அனுபவத்தை பல பிரச்சனைகளை சமாளிப்பதில் இருந்து கற்று கொள்கிறாயோ அது உன்னை நீ நினைத்து பார்க்க முடியாத தூரத்திற்கு அல்லது செல்லும்.
ஒரு தோட்டத்தில் ஒரு வாழைமரமும், ஒரு பக்கம் மூங்கில் மரக்கன்றும் நடப்பட்டது. விவசாயி நட்டு வைத்த 2 கன்றுக்குமே தினமும் தண்ணீர் ஊற்றுகிறார் . வாழை மரம் வளர ஆரம்பித்தது. ஆனால் மூங்கில் செடியில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை .
மாதங்கள் போனது வாழை மரம் பூ பூத்து விட்டது. விவசாயி வாழையை பார்த்து தட்டி கொடுக்கிறார். வாழை மரம் மிகவும் பெருமையாக நினைத்து கொள்கிறது. ஆனால் மூங்கில் செடியில் எந்த வித்தியாசமும் இல்லை.
Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food
மூங்கில் எந்த வளர்ச்சியும் இல்லாமல் தரையோடு இருக்கின்றது.
வாழை தாரை விட்டு அதன் திறமையை எண்ணி மிக கர்வதோடு நின்றது. ஒரு நாள் விவசாயி கையில் கொண்டு வந்த அறிவால் எடுத்து வாழைத்தாரை வெட்டி வீழ்த்தினார்.
மூங்கில் செடி அப்போதும் அமைதியாகவே இருந்தது. சுமார் 5 வருடங்களுக்கு பின் தன் அசுர வளர்ச்சியை காட்டியது. சுமார் 80 அடிகளுக்கு மேலாக ஓங்கி வளர்ந்துநின்றது . எவ்வளவு வளர்ந்தாலும் அதன் வேர்கள் அதனை வலுவாக தாங்கி நின்றது. அதன் பொறுமைக்கு காரணம் வேர்கள் நன்கு வலுவாக நிற்பதற்கே. இனி எந்த நிலையிலும் தன்னை தாழ்த்தி ,ஒடிந்து கிழே விழாது.
அதே போல நாமும் நமது இலக்கை நோக்கி வேகமாக ஓடுகிறோமா அல்லது மெதுவாக நகர்கிறோமா என்பது முக்கியம் கிடையாது. எவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறோம் என்பதே பெரியது.
உன்னோடு ஆரம்பித்தவர்கள் எல்லாம் நன்றாக வளர்ச்சி அடையலாம். ஆனால் உன் வளர்ச்சி குறைவாக தெரியலாம். பொறுமையாக இரு. எதையும் கூர்ந்து கவனி. துணிவாக கையாள். எதுமே சாத்தியமே முடியும் என்று துணிந்தால்.
Read Also: வெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்-
எதுவும் எளிதில் கிடைத்து விட்டால் உன் திறமையை யார் சோதிப்பது. உனக்கு எவ்வளவு திறமைகள் இருக்கிறது என்பதை எப்படி நீ முதலில் உணர்வாய். பிரச்சனைகளை கண்டு ஒதுங்கி ஓடாதே ! எதிர்த்து நில் . களத்தில் இறங்கிய பின்பு தான் ஆழம் புரியும்.
மற்றவர்களோடு போட்டி போட்டு , அடுத்தவரின் வாழ்க்கையை நினைத்து தன் முன்னேற்றத்தை குறைத்து கொள்வது விட. நம் வாழ்க்கை நாம் கையில் என்று நமது குறிக்கோளை மட்டும் பார்த்து வாழ்வில் முன்னேற துணிந்தால் எதுவும் நம் கையில். வெற்றி நிச்சயம்.