மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிக்க வைக்கும் சாலை பயணங்கள் !ThaenMittai Stories

மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிக்க வைக்கும் சாலை பயணங்கள்!

இயற்கைை அழகை அதன் போக்கிலேயே ரசித்தபடி சாலை பயணங்களை மேற்கொள்ள விரும்புவர்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை சிறந்த தேர்வாக அமையும். தென் இந்தியாவில் பிரபலமான சுற்றுலாத்தலங்கள் பலவும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியிலேயே அமைந்துள்ளன.
Read Also: ஆக்கபூர்வமான சிந்தனை ஏன் அவசியமான ஒன்று?
நீர் வீழ்ச்சிகள், சரணாலயங்கள், வன சுற்றுலா என பசுமை சூழலையும், இயற்கை அழகையும் ஒட்டு மொத்தமாக ரசிக்கலாம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா,கோவை,மராட்டியம், குஜராத், என 6 மாநிலங்கள் வலையாக மேற்கு தொடர்ச்சி மலையின் நீட்சி அமைந்திருக்கிறது. சாலை மார்க்கமாக மேற்கு தொடர்ச்சி மலையை ரசிக்க விரும்புவர்களுக்கு ஏற்ற வழித்தடங்கள் பார்க்கலாம்........

புனே முதல் மஹாபலேஷ்வர் வரை

வார இறுதி நாட்களில் இந்த பயணத்தை மேற்கொள்ளலாம். நகர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அமைதியான சூழலை ரசிக்க விரும்புவர்களுக்கு இந்த பயணம் ஏற்புடையதாக இருக்கும்.
Read Also: ஏன் புத்தகங்கள் படிக்க வேண்டும்? அதனால் என்ன மாற்றம் நமக்கு கிடைக்கின்றது ?
சாக்யத்ரி மலைத்தொடர் வழியாக வளைந்து, நெளிந்து பயணிக்கும் அனுபவமும், நிசப்தமான சூழலும் மனதை இதமாக்கும். மஹாபலேஷ்வரில் இயங்கும் சந்தை, அமைதி தவழும் வென்னா ஏறி என பார்ப்பதற்கு ஏற்ற இடங்கள் ஏராளம் இருக்கின்றன.

மும்பை முதல் கோவை வரை

N . H 66 தேசிய நெடுஞசாலை வழியாக தொடரும் இந்த சாலை பயணம் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகியலை விவரிக்கும் இயற்கை காட்சிகளை வழங்கும். அடர்ந்த காடுகள், மலை அடிவார பகுதியை சூழ்ந்திருக்கும் வசீகரமான கிராமங்கள், கடல் அழகை ரசிக்கும் சூழல், வரலாற்றுடன் தொடர்புடைய கோட்டைகள், நினைவு சின்னங்கள், பண்டைய காலா கோவில்கள் என வழி நெடுங்கிலும் இயற்கையோடு இணைந்த அம்சங்களை ரசிக்க முடியும்.
Read Also: அதிகம் - குறைவான சர்க்கரை அளவு கொண்ட பழங்கள்

கோவை முதல் மூணார் வரை

கோயமுத்தூர் வழியாக ஆனைமலையை கடந்து நீளும் இந்த சாலை பயணம் இயற்கை ஆர்வலர்களை குஷிப்படுத்தும் எழில் கொஞ்சும் காட்சிகளை வழங்கும். பசுமையான காடுகள், அருவிகள், பறந்து விரிந்த தேயிலை தோட்டங்கள் என அடுத்ததடுத்த இயற்கை அன்னையின் மடியில் தவழ்வது போன்ற உணவை ஏற்படுத்திக் கொடுக்கும்.
Read Also: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய பழக்கவழக்கங்கள் 5
மூணாறை சென்றடையும் போது அங்கு நிலவும் குளிந்த காலநிலை, பசுமை படர்ந்த நிலப்பரப்புகளை நகர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு வந்த உணர்வையும் ,புத்துணர்ச்சியையும் தரும். வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேயிலை தோட்டங்கள் இந்த பயணத்தை மறக்க முடியாத தருணமாக மற்றும்.

கொச்சி முதல் வயநாடு வரை

கேரளாவின் பசுமையான நிலப்பரப்பு வழியாக பயணிக்கும் இந்த பாதை அடர்ந்த காடுகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் அழகிய நீர்வீழ்ச்சிகள் என இயற்கை அழகால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பாரம்பரிய கேரளா கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை என பண்டைய வரலாற்றை அறியும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க குகைகள் என மாறுபட்ட பயண அனுபத்தை கொடுக்கும். இயற்கை ஆர்வலர்களுக்கு இது சிறந்த இடமாகவும் அமையும்.
Read Also: முன்னோர்கள் பயன்படுத்திய முத்தான அரிசிகள்

பெங்களூரு முதல் ஊட்டி வரை

நீலகிரி மலைகள் வழியாக செல்லும் இந்த பாதையில் பசுமையான தேயிலை தோட்டங்கள், பனி மூடிய மலைகள் கண்களுக்கு விருந்து படைக்கும். வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி சாலை வழி பயணம் மனதுக்கு உற்சாகத்தை அள்ளி கொடுக்கும்.
பள்ளத்தாக்கு பிரதேசங்களை காரில் பயனைத்தபடியே ரசிக்கும் அனுபவத்தையும் வழங்கும். அங்கங்கே காட்சி முனைகளில் நின்று மலை வாசஸ்தலங்களை நெருக்கமாக கடந்து செல்லும் மெகா கூட்டங்களும், இனிமையானா கால நிலையையும் ரசித்து மகிழலாம். பிரத்யேகமான மூலிகை தாவரங்களையும் காணலாம்.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook