எம்.பி.க்கள் தகுதி இழப்பது எப்போது ?- ThaenMittai Stories

எம்.பி.க்கள் தகுதி இழப்பது எப்போது ?

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹூவா மொய்த்ரா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து, சமீபத்தில் அவர் எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் இப்படி பல எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்
1951-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட மக்கள் பிரதி நிதித்துவ சட்ட 8(3)-வது பிரிவின்படி, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அதாவது அவர்களுடைய அந்த பதவி தானாக பறிபோய்விடும்.
இதேபோல் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலோ, திவால் ஆனவராக இருந்தாலோ,தீண்டாமை, வரதட்சணை கொடுமை, சதி குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகளில் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ, இந்திய குடிமகனாக இல்லாமல் இருந்தாலோ அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றொரு கட்சிக்கு தாவினால் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி பதவியை இழந்துவிடுவார்.

Read Also: வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை
எம்.பி.க்கள்   தகுதி இழப்பது எப்போது ?
ஆதாயம் தரும் வேறு ஏதாவது பதவி வகித்தாலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி போய்விடும். இப்படி அவர்களை தகுதிநீக்கம் செய்ய பல்வேறு சட்ட விதிமுறைகள் உள்ளன. 1988-ம் ஆண்டு முதல் இதுவரை 40-க்கும் அதிகமான எம்.பி.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக 14-வது நாடாளுமன்றத்தில் மட்டும் 19 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். வி.பி.சிங் ஆட்சியின் போது, கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் 9 எம்.பி.க்கள் பதவி இழந்தனர்.

கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 2005-ம் ஆண்டு பாரதீய ஜனதாவைச் சேர்ந்த 6 பேர், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 2 பேர், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளத்தைச் சேர்ந்த தலா ஒருவர் என 10 எம்.ஏற்ப பி.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

Read Also: How To Get Rid of Stress and Succeed?, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடைவது எப்படி?
அமெரிக்காவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2008-ம் ஆண்டில் இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்றன. இதைத்தொடர்ந்து, மன்மோகன் சிங் அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய போது, கட்சி மாறி ஓட்டுப்போட்ட 9 எம்.பி.க்கள் பதவி இழந்தனர்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோர்ட்டு தீர்ப்பு கூறி அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அப்போது அவர் சரன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து அவர் எம்.பி.பதவியை இழந்தார்.

இதே வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஜெகனாபாத் தொகுதி ஜனதாதள எம்.பி. ஜக்தீஷ் சர்மாவும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால் 2016-ம் ஆண்டில் நாடாளுமன்ற 'நீதிநெறிக் குழுஅவரை தகுதிநீக்கம் செய்ய முடிவு செய்தது.ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் ராஜினாமா செய்துவிட்டார்.

Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் 2019-ம் ஆண்டு குற்றவாளி என தண்டிக்க பட்ட உத்தரபிரதேச மாநிலம் ராம்பூ தொகுதி எம்.பி. ஆசம்கான் நீக்கம் செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் தொகுதி பகுஜன் சமாஜ் எம்.பி. அப்சல் அன்சாரிக்கு குண்டர்கள் தடுப்பு சட்ட வழக்கில் கடந்த ஆண்டு மே 1-ந்தேதி 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு சீட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதனால் அவர் எம்.பி. பதவியை இழந்தார்.

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் லட்சத்தீவு தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.ஆனால் மேல்முறையீட்டு வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் அவரை தகுதிநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த ஆண்டு மார்ச் 23-ந்தேதி சூரத் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, அவர் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை இழந்ததாக நாடாளுமன்ற மக்களவை பொதுச்செயலாளர் உத்பல்குமார் சிங் அறிவித்தார். ஆனால் அந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ஆகஸ்டு மாதம் நிறுத்தி வைத்து தீர்ப்பு கூறியதால், ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து எம்.பி.யாக இருந்து வருகிறார். இப்படி பல எம்.பி.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் .

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook