உலகம் முழுவதும் கொண்டாடப்படும் புத்தாண்டு
உலகெங்கிலும் வாழும் மனித இனம், நாள்தோறும் ஓடி ஆடி வேலை செய்த களைப்பின் காரணமாக, ஏதேனும் விழா கொண்டாடி மகிழ்ச்சி காண்பது இயல்பாகும். தங்களின் பிறந்தநாள், நாடு விடுதலை பெற்ற தினம், உணவிற்கான வேளாண் தொழில் தொடங்கும் நாள், விளைந்த பயிரை அறுவடை செய்கின்ற அறுவடைத் திருநாள், ஆண்டின் தொடக்க நாள் என்று பல நாட்களை நாம் விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரைஅந்த வகையில் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நாளை தமிழர்கள் மட்டுமின்றி வடகிழக்கு இந்தியாவில் வாழும் அசாமியர்கள் 'போஹக் பிஹூ' என்ற பெயரிலும், சீக்கியர்கள் ‘பைசாகி” என்ற பெயரிலும், பீகார் மற்றும் ஜார்கண்ட் மக்கள் ‘மைதிலி புத்தாண்டு' என்றும், மலையாளிகள் 'விஷூ' என்றும், தெலுங்கு பேசும் மக்கள் 'யுகாதி' அல்லது 'உகாதி' என்றும் கொண்டாடுகிறார்கள். கம்போடியாவில் 'சங்கராந்தா' என்ற பெயரிலும், மியான்மரில் ‘திங்யென்' என்ற பெயரிலும், தாய்லாந்தில் 'சொங்ரான்' என்ற பெயரிலும், லாவோசில் 'பிமாய்' என்ற பெயரிலும் புத்தாண்டு நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
போஹூக் பிஹூ அல்லது ரோங்காலி என்று அழைக்கப்படும் அசாமியப் புத்தாண்டு தினம், அசாம் மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் நடைபெறும் விழாவாகும். திபெப்தோ-பர்மன் மற்றும் தை கூறுகளை உள்ளடக்கிய இந்தத் திருவிழா பெரும்பாலும் பழங்குடியினர் மரபைச் சார்ந்து நடைபெறுகின்றது.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்இந்த நாள் அசாமின் வெவ்வேறு பூர்வ குடிகளை ஒன்றிணைக்கும் பெரும் விழாவாகவும் விளங்குகிறது. இது சூரிய புத்தாண்டின் தொடக்கத்தையும், புதிய அறுவடை பருவத்தின் தொடக்கத்தையும் குறிப்பிடுகிறது.
சீக்கியர்களின் சமயத் திருவிழாவாக புது ஆண்டின தொடக்க விழா அமைகின்றது. வைசாகி அல்லது
என்று அழைக்கப்படும் இவ்விழா, பஞ்சாப் மற்றும் வட இந்தியாவில் வசந்த கால அறுவடைக் கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது. இந்நாள் சீக்கியர்களின் வரலாற்றோடு முக்கிய தொடர்புடைய நாளாகும்.
ஜூட் ஷீத்தல் அல்லது மைதிலி புத்தாண்டு விழா, பீகார், ஜார்கண்ட் மற்றும் நேபாளத்தில் உள்ள மைதிலி இன மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏப்ரல் 14-ந் தேதி இவ்விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதே போன்று 'குடி பட்வா' என்ற பெயரில் மராத்திய மக்களால் மராட்டியத்தில் புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவும் வரலாற்றுத் தொடர்போடு பேசப்படுகிறது. சத்ரபதி சிவாஜி, தன் எதிரிகளை வென்றதை குறிக்கிறது, இந்த விழா. அதே போன்று யுகாதி விழா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களாலும், கர்நாடக மாநிலத்திலும் கொண்டாடப்படும் புத்தாண்டு ஆகும். இவ்விழாவானது தமிழர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ அதேபோன்ற நடைமுறையில்தான் கொண்டாடப்படுகிறது.
கேரளத்தில் விஷூ பண்டிகை என்ற பெயரில் அறுவடையின் தொடக்கத்தை கொண்டாடும் விதமாக தீபங்கள் ஏற்றி, வாண வேடிக் கையோடு, காய்கறிகள், பழங்கள் வைத்துப் படைத்து, இக்காலத்தில் பூக்கின்ற பூக்களையும் வைத்து வழிபாட்டுடன் கொண்டாடுகிறார்கள். இதேபோல ஈரானில் ஜாம்ஷெட் நவ்ரோஸ் என்ற பெயரில் கொண்டாடப்படும் ஈரானிய புத்தாண்டு உலகெங்கிலும் உள்ள பல இனக்குழுக்களுக்கு உரியது. இந்தியாவில் பார்சி மக்களும் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர்.
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லாகம்போடிய அல்லது கெமர் புத்தாண்டு வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் இவ்விழாவிற்காக அந்நாட்டு அரசு 3 நாட்கள் பொது விடுமுறை அளிக்கிறது. அறுவடைப் பருவத்தில் நிலவைப் போற்றும் விதமாகவும், விவசாயிகள் தங்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கும் நாளாகவும் இப்புத்தாண்டு அமைகின்றது. சோங்ரன் என்னும் புத்தாண்டு விழா, அந்த மக்களின் பாரம்பரியத்தைப் போற்றும் விதமாகவும், மூத்தோரை மதிக்கும் விதமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஒட்டு மொத்தமாக தமிழ்ப் புத்தாண்டை நோக்கும்போது, தமிழர்களோடு தொடர்புடைய மக்கள் உலகளவில் இருப்பதையும்,இங்கு நடைபெறுவடைபோல இந்தியாவின் பிற மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவதையும் நாம் அறிய முடியும். அந்த வகையில் கடல்கடந்து சென்ற நம் தமிழ் மன்னர்கள் நம் பண்பாட்டையும், நாகரிகத்தையும் பல நாடுகளில் விதைத்து சென்றுள்ளதை எண்ணி நாம் பெருமை கொள்வோம், அவர்களை நினைவுகூர்ந்து போற்றுவோம்.