அதிசய கட்டடக்கலையும்... அதிகம் அறியப்படாதவையும்..! புர்ஜ் கலீபாவின் அழகிய தோற்றம்

புர்ஜ் கலீபாவின் அழகிய தோற்றம்

2010-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி புர்ஜ் கலீபா திறக்கப்பட்ட போது, அதன் பிரமாண்டத்தையும், நவீன கட்டிடக்கலை நுட்பங்களையும் கண்டு உலகமே வியந்தது. உலக அரங்கில் துபாய்க்கு தனித்துவ அந்தஸ்து கிடைத்தது. வசீகரிக்கும் இந்த அதிசய கட்டிடத்தின் அழகியலுக்கு பின்னணியில் பலரும் அதிகம் அறியப்படாத தகவல்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் சில உங்கள் கவனத்திற்கு...

உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக விளங்கும் இது 828 மீட்டர் (2,717 அடி) உயரம் கொண்டது. 163 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டல்கள், வணிக வளாகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்பட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த வானளாவிய கட்டிடம் ஈபிள் கோபுரத்தை விட மூன்று மடங்கு உயரமும், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட இரண்டுமடங்கு உயரமும் கொண்டது. "அதிக அடுக்குமாடிகளை கொண்ட கட்டிடமாக விளங்கும் இதில் 57 லிப்ட்டுகளும், 8 எஸ்கலேட்டர்களும் உள்ளன."

Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்
உலகின் மிக நீண்ட தூர பயண லிப்ட்களாக அவை அமைந்திருக்கின்றன. வினாடிக்கு 10 மீட்டர் என்ற அசுரவேகத்தில் செல்லும் ஆற்றல் படைத்தவை. 124-வது மாடிக்கு லிப்ட்டில் ஒரு நிமிடம்தான் செல்ல ஆகும். இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் இருந்து 160-வது படிக்கட்டு மாடி வரை 2,909 படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. உலகின் உயரமான உணவகம் 122-வது மாடியில் உள்ளது."

Read Also: வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை
இங்குள்ள உயரமான தளங்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர் கண்டிஷனர்கள் வான் பரப்பில் இருந்து குளிர் காற்றை உள் இழுக்கின்றன. அடிப்பகுதியில் இருக்கும் காற்றை விட சுத்தமாகவும் அவை இருக்கும். ஏர்கண்டிஷனர்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பூங்காவில் உள்ள செடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது."

புர்ஜ் கலீபாவில் சுமார் 26 ஆயிரம் கண்ணாடி ஜன்னல் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அறைக்குள் வெப்பம் பரவுவதை குறைக்கும் தன்மை கொண்டவை.

Read Also: How To Get Rid of Stress and Succeed?, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடைவது எப்படி?
உயரமான தளங்களின் வெப்பநிலை அதன் அடிப்பகுதியை விட 15 டிகிரி செல்சியஸ் வரை குளிராக இருக்கும்.
கட்டுமானப்பணி தொடங்கி திறக்கப்படும் வரை புர்ஜ் துபாய் என்றே அறியப்பட்டது. அபுதாபியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய அரசும் இந்த வானளாவிய கட்டுமானத்திற்கும், துபாயின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க டாலர்களை கடனாக அளித்தன. அபுதாபியின் அப்போதைய ஆட்சியாளரான கலீபா பின் சயீத் அல் நஹ்யனின் நினைவாக புர்ஜ் கலீபா என பெயர் சூட்டப்பட்டது.

Burj Khalifa, the iconic

59 மைல் (95 கி.மீ) தொலைவில் இருந்து கூட புர்ஜ் கலீபாவின் உச்சி பகுதி தெளிவாக கண்களுக்கு தெரியும்.

2004-ம் ஆண்டு இதன் கட்டுமானப்பணி தொடங்கியது. கட்டிடம கவைர் அட்ரியன் சுமீத் இதனை வடிவமைத்தார். மலரும் பாலைவனத் தாவரமான ஹைமனோகலீஸ் மலரின் இதழ்கள் அடுக்கடுக்காக நீள் வாக்கில் கட்சி அளிக்கும்.
அதன் அழகில் ஈர்க்கப்பட்டு ஒய் வடிவ கட்டுமான திட்டத்தை வடிவமைத்தார், இஸ்லா பாரம்பரிய வடிவமைப்பு அம்சங்களுட நவீன தொழில்நுட்பங்களை புகுத்தியும் இந்த பிரமாண்ட அதிசயத்தை நிர்மாணித்திருக்கிறார்.
உலகின் உயரமான பார்வையாளர் கண்காணிப்பு தளம் 148-வது மாடியில் 1,821 அடி(555 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து பார்வையிடுவது பிரமிக்க வைக்கும் அனுபவத்தை தரும். சுற்றுப்புற பகுதிகளும், பூமியின் பாகங்களும் மிரள வைக்கும் வகையிலான காட்சிகளை அளிக்கும்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
புர்ஜ் கலீபாவை சூழ்ந்திருக்கும் பூங்கா 27 ரக்கர் பரப்பளவு கொண்டது. புர்ஜ் கலீபாவை போலவே பூங்காவின் வடிவமைப்பும் பாலை வனத் தாவரமான ஹைமனோகாலிஸ் பூவை அடிப்படையாகக் கொண்டது.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook