115 கிலோ உடல் எடையை 70 கிலோவாக குறைத்த செவிலியர் /உடல் எடையை இயற்கையான முறையில் குறைக்க

Weight Loss Tips

25 வயதுக்குள்ளேயே 115 கிலோ எடையுடன் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்ட செவிலியர் ஒருவர் உணவு மற்றும் உடற்பயிற்சியை எளிமையான முறையில் பின்பற்றியே ஒரு வருடத்துக்குள் 45 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார். இப்போது 70 கிலோ உடல் எடையுடன் வயதுக்குரிய இளமை தோற்றத்தில் மிளிர்கிறார். அந்த செவிலியர் பெயர், சமந்தா aprhu.

Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்தவர் சிறு வயது முதலே உடல் பருமன் பிரச்சினையை எதிர்க்கொன்றிருக்கிறார்.அவருக்கு அடிக்கடி பசிக்கும் பிரட்சனை இருந்திருக்கிறது. அதனால் பசியை போக்க எந்த வரைமுறையும் இன்றி சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றி வந்திருக்கிறார்.

அவற்றுள் பெரும்பாலானவை நொறுக்குத்தீனி ரகம்தான். அதனால் வயது அதிகரிப்பதற்கு ஏற்ப உடல் எடையும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. படிப்பை முடித்து செவிலியராக மருத்துவமனையில் பணியில் சேர்ந்த பிறகும் அடிக்கடி சாப்பிடும் பழக்கம் அவரை விட்டு விலகவில்லை.

இரவு உணவுக்கு பிறகும் பிரட் மற்றும் நொறுக்குத்தீனிகளை ருசித்து சாப்பிடுவர். அவருக்கு காலையில் உற்சாகமாக எழுந்து பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுருக்கிறது. அதிகம் சாப்பிடும் பழக்கத்தால் உடல் பருமன் பிரச்னையுடன் உடல் சோர்வும் சேர்ந்து கொண்டது. எதை பற்றி அவர் சொல்லும்போது நான் தினமும் 10 மணி நேரம் வேலை பார்க்கிறேன். ஆனால் சோர்வு காரணமாக பணியை முடிப்பதற்கு ரொம்பவே சிரமப்படுவேன் என்று சொல்லுகிறார்.

Read Also: சாதிக்க தூண்டும் தங்க தூண்டில் கதை
மருத்துவமனையில் உடல் பருமன் பிரச்சனைக்காக சிகிச்சை வருபவர்களை பார்த்தும் கூட அவரால் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற முடியவில்லை. கொரோன காலக்கட்டம்தான் அவரது வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகள் பலர் அனுபவித்த கஷ்டங்களும், படுக்கையில் இருந்து எழுந்து நடமாட முடியாமல் முடங்கியவர்கள் எதிர்கொண்ட துயரங்களும் சமந்தாவை சிந்திக்க வைத்திருக்கின்றது. நமக்கும் நடக்கவே முடியாத அளவுக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்டவர், தினசரி நடை பயிற்சி செய்ய தொடக்கி இருக்கிறார். அது உடல் அளவிலும், மனதளவிலும் மாற்றத்தை ஏற்படுத்த நடைப்பயிற்சியை ஒரு வரமாக உணர்ந்திருக்கிறார்

என்னுடைய மனநிலை மற்றும் உடல் நலனுக்காக நடைப்பயிற்சி செய்ய தொடங்கினேன். அது கொடுத்த ஆறுதல் உணவு பழக்கத்திலும் கட்டுப்பாடுகளை விதிக்க தூண்டியது. படிப்படியாக உணவின் அளவை குறைத்தேன் . அதே வேளையில் என் விருப்ப உணவுகளை தவிர்க்கவில்லை. அதில் மாற்றங்களை செய்தேன். குறிப்பாக பீஸ்சாவிற்கு பதிலாக தானியங்கள்,சிக்கன் கலந்த பிஸ்சாவை சாப்பிட தொடங்கினேன் என்று கூறுகிறார்.

easy way weight loss tips
அதையும் குறைந்த அளவே சாப்பிடுகிறேன் என்றும் சொல்கிறார். அவர் அதிக உடல் பருமன் கொண்டிருக்கும்போது காலை உணவாக பொறித்த ரொட்டி, மதிய உணவாக சான்விட்ச் , இரவு உணவாக எண்ணையில் வறுத்த உணவாக சாப்பிட்டு வந்ததாகவும், இப்போது காலை உணவாக ஓட்ஸ் மற்றும் பழங்களையும் சாப்பிடுகிறேன் என்றும், மதிய உணவாக கிரேக்க சிக்கென்பாஸ்தா,இரவு உணவாக தானியங்கள் சேர்க்கப்பட்ட பிட்ஸ்சா சாப்பிடுகிறேன் என்றும் கூறுகிறார்.

இப்போது தினமும் பத்தாயிரம் காலடிகள் தூரம் நடப்பதாகவும், ஒரு வாரத்துக்கு 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து விட வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கிறேன் என்றும், வாரத்திற்கு நான்கு முறை ஜிம்மிக்கு சென்றும் உடற்பயிச்சியை மேற்கொள்கிறேன் என்றும் சொல்கிறார். மேலும் என் உடல் எடையில் ஏற்பற்றிருக்கும் மாற்றத்தை கண்கூடாக பார்ப்பது பெருமிதமாக இருக்கிறது,இப்போதுதான் அழகானவளாக, வலிமை உடைய பெண்ணாக உணர்கிறேன். என்னை பார்த்து மற்றவர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
அவர்கள் என்னை போலவே மெதுவாக மாற்றத்தை செயல் படுத்த தொடங்க வேண்டும். அப்போதுதான் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். அதுதான் எனக்கு வேண்டும் என்கிறார்,தான் இயற்கை வழிமுறைகளை பின்பற்றி உடல் எடையை குறைந்திருக்கும் விஷயத்தை பெருமையோடு நம்மோடு பகிர்ந்திருக்கிறார். அவரது முயற்சியை பலரும் பாராட்டி இருக்கிறார்கள். தங்களை பின்தொடரபோவதாக கூறி இருக்கிறார்கள்.

நம்மில் பல பேர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றும், ஆனால் அது சாத்தியமே இல்லாத காரியம் போன்றும் எண்ணுகிறோம். இயற்கையான முறையில் எளிய உடைபயிற்சிகள் மூலமும், உணவு முறைகளில் சிறிய மாற்றத்தை கொண்டது வந்தால் நானும் அழகான ,வலிமையான உடல் அழகை பெறலாம். நம்மளும் முடியும். முயற்சி திருவினை ஆக்கும்.

Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook