தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு தேர்வு சொல்லும் பெண்மணி !
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரம் சமீபத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையை எதிர்கொண்டது. இப்போது வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை எட்டிப்பார்க்க தொடங்கி உள்ளது.
Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்
அதனை சமாளிக்க பலரும் புத்திசாலித்தனமான வழிமுறைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாடு விஸ்வரூபம்
எடுக்காமல் தடுத்துவிடலாம். பெங்களூருவை சேர்ந்த தோல் மருத்துவர் திவ்யா சர்மா, தான் தினமும் 600 லிட்டர் தண்ணீரை சேமிப்பதாக கூறுகிறார். 4 பேர் கொண்ட தனது குடும்பத்தினர் அன்றாட வாழ்க்கை
முறையை பாதிக்காமல் தண்ணீரை சிக்கனமாக எப்படிபயன்படுத்துகிறார்கள், தினமும் 600 லிட்டர் வரை எவ்வாறு சேமிக்க முடிந்தது என்பதை பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
"ஷவரில் குளிப்பது பலருக்கும் பிடிக்கும். ஆனால் இந்த சமயத்தில் 'ஷவர் குளியலுக்கு' ஓய்வுகொடுத்துவிடுங்கள். நான் எப்போதும் பக்கெட் குளியலைதான் ஊக்கப்படுத்துவேன். ஏனெனில் ஷவரை திறந்து குளித்தால் ஒரு நிமிடத்தில் 13 லிட்டர் தண்ணீர் வெளியேறும். ஆனால் ஒரு வாளியில் 20 லிட்டர் தான் தண்ணீர் சேமிக்கப்படும். ஷவர் குளியலுடன் வாளி நீரில் குளிப்பதை ஒப்பிடும்போது ஒருவர் 45 லிட்டர் வரை நீரை சேமிக்கலாம். அப்படி என்றால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் வாளியில் குளிப்பதன் மூலம் தினமும் 180 லிட்டர் நீரை சேமிக்கிறோம்" என்கிறார். தோல் மருத்துவர் என்ற முறையில் வாளி குளியலை பயன்படுத்துவதுதான் சரியானது என்றும் சொல்கிறார்.
Read Also: வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை
ஷவரில் நீண்ட நேரம் குளித்தால் சருமம் விரைவாக வறண்டு போகும். சிலருக்கு தோல் அழற்சி பிரச்சினையும் உண்டாகும். வாளியில் குளிக்கும் குறுகிய நேர குளியல் நீர் இழப்பை தடுக்கவும், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவும்” என்றவர், பெங்களூரு போன்று தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் நகர மக்களுக்குஏரேட்டர் என்ற கருவியை பரிந்துரைக்கிறார்.“கடந்த சில வருடங்களாகவே, ஏரேட்டர் என்ற கருவி தண்ணீர் சேமிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. ஏரேட்டர் (Aerators) எனப்படும் அந்தச் சிறிய கருவி தண்ணீர் குழாயின் உட்புறம் பொருத்தப்படும். காற்றையும் தண்ணீரையும் கலக்க வைத்து சீரான தண்ணீரை வெளியேற்றும் பணியை இந்த ஏரேட்டர் செய்கிறது.
ஒரு நிமிடத்துக்கு 15 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் குழாயில் ஏரேட்டரைப் பொருத்தியபின், வெளியேறும் தண்ணீரின் அளவு நிமிடத்துக்கு 6 லிட்டராகக் குறைகிறது. அதாவது, ஒரு மாதத்துக்கு 1,274 லிட்டர் தண்ணீரை ஏரேட்டர் மிச்சப்படுத்துகிறது. இதுவும், 600 லிட்டர் தண்ணீர் சேமிப்புக்கு மிக முக்கிய காரணம்” என்றவர்,ஆர்.ஓ. பியூரிபையர் கருவியில் இருந்து வெளிவரும் நீரையும் பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறார்.
“ஆர்.ஓ.பியூரிபையர் கருவியின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உருவாக்க முடியும். இந்த செயல்முறையில் கொஞ்சம் தண்ணீர் வீணாக்கப்படும். பலரும், அந்த தண்ணீரை பயன்படுத்தக்கூடாது என்பார்கள். அதையும் நான் பயன்படுத்துகிறேன். எப்படி என்கிறீர்களா...? தரை துடைக்க, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற... போன்ற வேலைகளுக்கு, அந்த தண்ணீரை பயன்படுத்துகிறேன். அந்தவகையிலும், எனக்கு ஒரு நாளைக்கு 30 லிட்டர் தண்ணீர் மிச்சமாகிறது. அதுவே ஒரு மாதத்திற்கு என கணக்கிட்டு பார்த்தால், கணக்கு நம்மை ஆச்சரியப்படுத்தும்" என்பவர், பெங்களூரு போன்ற தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் நகரங்களில் வாழும்போது, வாஷிங் மிஷின்களை 100 சதவீதம் பயன்படுத்த அறிவுறுத்துகிறார்.
Read Also: How To Get Rid of Stress and Succeed?, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடைவது எப்படி?
அதுபற்றி திவ்யா கூறுகையில்...'“கைகளால் துணி துவைப்பதை விட,
வாஷிங் மிஷினில் துணி துவைப்பது அதிக தண்ணீரை மிச்சப்படுத்த உதவும். அதுவும், நவீன வாஷிங் மிஷின்கள், 60 முதல் 70 லிட்டர் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தும். இந்நிலையில், வாஷிங் மிஷின் முழுமையாக நிரம்பும் வகையில் 100 சதவீதம் துணிகளை நிரப்பி துவைக்கும் போது, தண்ணீரை கூடுதலாக மிச்சப்படுத்தலாம்.
என்னுடைய வீட்டு வாஷிங்மிஷினில், காலி இடங்களே இல்லாமல்
முழுமையாக நிரம்பிய பிறகுதான், துவைக்கதுவைக்க தொடங்குவேன். கேட்பதற்கு கொஞ்சம் வினோதமாக இருந்தாலும், இந்த சின்ன சின்ன மாற்றங்கள் தான், 600 லிட்டர் வரை தண்ணீர் சேமிக்க வழிகாட்டுகிறது. மேலும், நான் தண்ணீர் குழாய்களில் அடைப்போ, உடைப்போ இல்லாமல் முறையாக பராமரித்து, என்னிடம் இருக்கும் தண்ணீரை பக்குவமாக செலவழிக்கிறேன்" என்று, தண்ணீர் எக்ஸ்பெர்ட்டாக மாறி, அவரது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?