நீங்க உயரம் குறைந்தவரா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க !உயரமாக தோற்றமளிக்க 'ஸ்டைலிஷ் டிப்ஸ் ! ThaenMittai Stories

நீங்க உயரம் குறைந்தவரா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க !உயரமாக தோற்றமளிக்க 'ஸ்டைலிஷ் டிப்ஸ் !

உயரம் குறைவாக இருப்பவர்கள் தங்களை உயரமானவர்களாக காட்டிக்கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாளுவார்கள்.உடுத்தும் ஆடையிலும், அலங்காரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.அதே யுக்தியை பின்பற்றி உயரமாகவும், ஸ்டைலிஷான தோற்ற பொலிவுடனும் காட்சி அளிக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ்...

குட்டை ஆடை

விதவிதமான டிசைன்கள் இடம்பெறும் வகையிலான குட்டை ஆடை அணியலாம். அந்த ஆடை கால்கள் நீளமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதனால் பார்ப்பதற்கு நீங்கள் உயரமாக இருப்பதுபோல் தோன்றும்.
Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்
நீங்க உயரம் குறைந்தவரா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க !உயரமாக தோற்றமளிக்க 'ஸ்டைலிஷ் டிப்ஸ் !

நீளமான கோடு

உடுத்தும் ஆடையில் மேலிருந்து கீழாக, செங்குத்து வடிவ கோடுகளை கொண்ட வடிவம் இடம் பெற வேண்டும். அவை இரண்டு வண்ணங்கள், அடுத்தடுத்து கோடு வடிவில் காட்சி அளிப்பது போல் இருப்பது சிறப்பானது. அத்தகைய செங்குத்து கோடுகள் உயரமான தோற்றம் கொண்டவரை போன்ற மாயையை உருவாக்கிக்கொடுக்கும். அதனால் மற்றவர்கள் பார்வைக்கு சற்று உயரமாக இருப்பது போல் தெரியும்.
Read Also: வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை

ஹீல்ஸ் செருப்பு

ஹில்ஸ் அணிவதும் உயரமாக தோற்றமளிக்க வழிவகை செய்யும். அந்த ஹீல்ஸ் செருப்பு கால்கள் பளிச்சென்று தெரியும் வண்ணம் மெல்லிய வடிவமைப்பு கொண்டதாக இருக்க வேண்டும். உடலின் நிறத்திற்கு ஏற்ற விதத்தில் அந்த செருப்பு அமைவது உயரமாகவும், புது ஸ்டைலிஷ் தோற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஈரடுக்கு ஆடை

மேலாடை அணிந்து விட்டு அதற்கு மேல் கோட் அணிவது போல் மற்றொரு ஆடையும் அணிவது உயரமாக தோற்ற மளிக்க வழிவகை செய்யும். அதுபோல் ஜாக்கெட்டுகளை அலங்கரித்து அணிவதும் சற்று உயரமாக காண்பிக்கும்.
Read Also: How To Get Rid of Stress and Succeed?, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடைவது எப்படி?

வி வடிவ சட்டை

அணியும் மேலாடையின் கழுத்து பகுதி 'வி' 'வடிவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி ஆடை 'வி' வடிவில் தெரிவது ஒருவித மாயையை உருவாக்கி மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க செய்யும். அது அவர்களின் பார்வைக்கு உங்களை உயரமானவரை போல் காட்டும்.
Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?

ஒரே வண்ண ஆடை

ஒரே வண்ணம் கொண்ட ஆடையை அணிவதும் சிறந்த தேர்வாக அமையும். தினமும் அப்படிப்பட்ட ஆடைகளை அணிவது உங்களை உயரமாக தோற்றமளிக்க செய்யும். மற்றவர்கள் மரியாதை கொடுக்கும் அளவிற்கான தோற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

இடுப்புக்கு மேல் ஆடை

ஜீன்ஸ் அல்லது பேண்ட் உடுத்தும்போது அதனை இடுப்பு பகுதிக்கு மேலே உயர்த்தி அணிய வேண்டும். மேலாடையை உள் பக்கமாக சொருகி 'இன்' செய்து கொள்ள வேண்டும். அப்போது பேண்ட் உயரமாக இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும். அதுவே பார்ப்பதற்கு உயரமாக இருப்பது போன்ற மாயையையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook