21 நாட்கள் விரதம் இருந்து உடல் எடையை குறைத்த இளைஞர் | ThaenMittai Stories

21 நாட்கள் விரதம் இருந்து உடல் எடையை குறைத்த இளைஞர்

உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாளுகிறார்கள்.கோஸ்டாரிகா நாட்டை சேர்ந்த இளைஞர் 21 நாட்கள் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி 13 கிலோ உடல் இரையை குறைத்திருக்கிறார். அவரது எடை குறைப்பு யுக்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாராட்டுகளையும், எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது.
நான் 21 நாள் தண்ணீர் விரதத்தை தொடங்கினேன். இந்த அனுபவம் உண்மையிலே என் வாழ்க்கையை மாற்றியது. எனது எடை இழப்பு பயணத்தின் சில தருணங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றவர் தான் மூன்று வாரங்கள் முழுவதும் பின்பற்றிய விரத முறையை பகிந்து கொண்டார்.
Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்
"21 நாட்களும் நான் உணவோ, உப்பு சேர்க்கப்பட்ட பொருளோ எதையும் உட்கொள்ளவில்லை. அதனால் 13 .1 கிலோ (28 பவுண்டுகள் ) உடல் எடையை இழந்தேன். என் உடலில் 6 சதவீதம் கொழுப்பு குறைந்தது .21 நாள் தண்ணீர் விரதம் எப்படி இருக்கும் என்பதை பகிந்து கொள்ள நினைத்தேன் என்றும் தான் எதற்கு முன்பு இவ்வாறு உடல் எடையுடன் இருந்தேன் என்றும் தற்போது எடை குறைந்து இருக்கும் புகைப்படத்தை பகிந்திருக்கிறார்.
அடிஸ் மில்லர் எனும் இளைஞர் தண்ணீர் மட்டுமே அருந்தி உடல் எடையை குறைந்திருப்பது விவாதத்தையும் எழுப்பி இருக்கிறது. Read Also: வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை

தண்ணீர் விரதம் பாதுகாப்பானதா ?

தண்ணீர் உண்ணாவிரதம் என்பது 24 மணி நேரம் முதல் பல நாட்கள் அல்லது வாரங்கள் வரை, தண்ணீரை மட்டுமே உட்கொள்வதாகும். இந்த தண்ணீர் விரதம் சில ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும். குறிப்பாக உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவது , செரிமானம் மேம்படுவது, மனம் தெளிவடைவது என உடல் நலனுக்கு நன்மை பயக்கும்.எடை இழப்புக்கு உதவும். ஆனால் டாக்டரின் மேற்பார்வையின்றி மேற்கொள்ளக்கூடாது. உடல் நலன், வயது,மருத்துவ கரணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்னர் மருத்துவர் அனுமதிக்கும் கால திட்டம் வரை மேற்கொள்ளலாம். தன்னிச்சையாக தண்ணீர் உண்ணாவிரதம் இருப்பது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடும்" என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடு

உணவு உட்கொள்ளாமல் நீண்ட நாட்கள் இருப்பது விட்டமின்கள்,தாதுக்களை,எலக்ட்ரோலைட்டுகள் போன்ற அத்யாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைபாடுகளுக்கு வழி வகுக்கும். அதன் காரணமாக உடல் பலவீனம், தலை சுற்றல் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
Read Also: How To Get Rid of Stress and Succeed?, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடைவது எப்படி?

தண்ணீர் விரதம் ஏற்படுத்தும் இன்னல்கள்

நீரிழப்பு

உடலுக்கு நீர் இன்றியமையாததாக இருந்தாலும், அதிகப்படியான தண்ணீரை உட்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கு வித்திடும். உடலில் நீரிழப்பும் ஏற்பட கூடும்.
21  நாட்கள் விரதம் இருந்து உடல் எடையை குறைத்த இளைஞர்  !

வளர்ச்சிதை மற்றம்

நீண்ட நாட்கள் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது வளச்சிதை மாற்றத்தை மெதுவக்கும். உண்ணாவிரதம் முடிந்ததும் மீண்டும் உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.

மருத்துவ காரணங்கள்

நீரிழிவு நோய் ,இதய நோய் உட்பட நாள்பட்ட நோய் பாதிப்பு கொண்டவர்கள் தண்ணீர் விரதத்தை தவிர்க்க வேண்டும்.அதனை மேற்கொள்ள விரும்பினால் மருத்துவரின் வழிகாட்டுதல் படி எத்தனை நாட்கள் மேற்கொள்ளலாம் என்பதை தீர்மானித்து அதன்படி செலயல்பட வேண்டும்.
Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?

மாற்று முறை

காலை இருந்து மாலை வரையோ அல்லது மருத்துவரின் கண்காணிப்பில் குறிப்பிட்ட சில நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது தண்ணீர் விரதத்துக்கு பாதுகாப்பான மாற்றாக அமையும். விரைவாக உடல் எடையை குறைப்பதற்கு வித்திடும் எந்த ஒரு முறையையும் முயற்சிக்கக்கூடாது. அது உடல் நலனுக்கு ஆபத்தையே ஏற்படுத்தும்.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook