ரிஷாப் பண்டின் எடை குறைப்பு பின்னணி - ThaenMittai Stories

ரிஷாப் பண்டின் எடை குறைப்பு பின்னணி

ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் 'கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி, எழுந்து நடமாடமுடியாமல் அவதிப்பட்டார்.கிரிக்கெட்டில் இருந்து சில காலம் ஒதுங்கி இருக்க வேண்டியதாயிற்று. தொடர் சிகிச்சை, கடுமையான உணவுக்கட்டுப்பாடு, தீவிர உடற்பயிற்சி என தன்னை தானே வலுப்படுத்திக்கொண்டு மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்குபெறுவதற்கு ஏற்ற உடல் தகுதியை பெற்றார்.
Read Also: ஆக்கபூர்வமான சிந்தனை ஏன் அவசியமான ஒன்று ?
நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வழக்கமான தனது அதிரடி பாணியை பின்பற்றி ரன் குவித்து வருகிறார். 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியிலும் இடம் பெற்றுவிட்டார். அவர் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதும், சுமார் 16 கிலோ உடல் எடையை குறைத்து கட்டுடல் தோற்றத்தில் காட்சி அளிப்பதும் ரசிகர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது. அவரது உடல் எடை குறைப்பு பின்னணியை பற்றி பார்ப்போம்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
குறைந்த இருப்பதும், சுமார் 16 கிலோ உடல் எடையை குறைத்து கட்டுடல் தோற்றத்தில் காட்சி அளிப்பதும் ரசிகர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது. அவரது உடல் எடை குறைப்பு பின்னணியை பற்றி பார்ப்போம். குறைந்த கலோரிகளை உட்கொண்டார் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியபோது அவரது வலது கால் கடும் பாதிப்புக்குள்ளானது. கால் தசைகளை வலுப்படுத்துவதற்கு கடுமையான பயிற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
அத்துடன் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான உடல் தகுதியை பெறவும் கடினமான பயிற்சிகளை செய்ய வேண்டியிருந்தது. அவரது உடலுக்கு ஒரு நாளைக்கு 1400 கலோரிகள் தேவைப்படுகிறது என்றால் சுமார் 1000 கலோரிகள் கொண்ட உணவுகளே கொடுக்கப்பட்டன. அத்தகைய கலோரி பற்றாக்குறை கொண்ட உணவுகளை சாப்பிட பழகிக்கொண்டார்.
ரிஷாப் பண்டின் எடை குறைப்பு பின்னணி
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்

எப்படி சமாளித்தார்?

ரிஷப் பண்ட் பெங்களூருவில் தங்கி இருந்து உடல் தகுதியை நிரூபிப்பதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டி யிருந்தது. அந்த சமயத்தில் ஓட்டல் உணவுகளை சாப்பிடுவது தான் பின்பற்றும் உணவுக் கட்டுப்பாட்டுக்கு பங்கம் விளைவித்துவிடும் என்று கருதி பெங்களூருவில் வாடகை வீட்டில் குடியேறி இருக்கிறார். அங்கு வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட்டிருக்கிறார். அவரது சமையலில் 5 மி.லி ஆலிவ் ஆயில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அவரால் சில்லி சிக்கன் மீதான காதலை கைவிட முடியவில்லை. அதனால் அந்த குறைந்த அளவு எண்ணெய்யிலேயே சில்லி சிக்கன் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அவர் பார்வையிடும் நேரம் குறைவாக இருந்தது. இரவு 11 மணிக்கு பிறகு எந்தவொரு கேஜெட்டுகளையும் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. தினமும் 8 முதல் 9 மணி நேரம் கட்டாயம் தூங்குவதற்கும் தன்னை பழக்கப்படுத்திக்கொண்டார்.

உணவு கட்டுப்பாடும்.. உடற்பயிற்சியும்..

உடல் எடை பராமரிப்புக்குத் தேவையானதை விட குறைவான கலோரிகளை உட்கொள்வதையே உணவுக்கட்டுப்பாடு என்கிறார்கள். அப்படி சாப்பிடுவது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைத்து கலோரி பற்றாக் குறைக்கு வழிவகுக்கும். உடற்பயிற்சியையும் முறையாக செய்யும்போது உடல் ஆற்றல் செலவிடப்பட்டு கலோரி பற்றாக்குறையை உருவாக்கும். அதற்கு ஏற்ப குறைவான கலோரிகளை கொண்ட உணவுகளை உட்கொண்டு உணவுக் கட்டுப்பாட்டை முறையாக மேற்கொள்வது உடல் எடை குறைவதற்கு வழிவகுக்கும் ஒட்டு மொத்த உடல் தகுதியையும் மேம்படுத்தும்.அந்த வகையில் உணவுக்கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் ஒருங்கிணைத்து பின்பற்றியதுதான் ரிஷப் பண்ட் உடல் எடை குறைவதற்கும், உடல் தகுதி பெறுவதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு

இனிப்பை தவிர்த்தார்

இனிப்பு சுவை கொண்ட பிரபல பலகாரமான ராஸ் மலாயை ரிஷப் பண்ட் விரும்பி உண்பார். அதனை அறவே தவிர்க்க பழகிக்கொண்டார். பிரியாணி, சுஸி எனப்படும் கடல் உணவு, வறுத்த கோழி இறைச்சி உள்ளிட்டவற்றை சாப்பிடுவதற்கும் ரிஷப் பண்ட் அனுமதிக்கப்படவில்லை. இத்தகைய உணவுக்கட்டுப்பாட்டுடன் பிரத்யேக பயிற்சிகளை கொண்ட அட்டவணையை தொடர்ந்து 4 மாதங்கள் பின்பற்றி வந்திருக்கிறார். அதன் காரணமாகவே அவரால் 16 கிலோ உடல் எடை குறைய முடிந்திருக்கிறது.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook