AC ஏற்படுத்தும் 8 இன்னல்கள் -ThaenMittai Stories

ஏ.சி. ஏற்படுத்தும் 8 இன்னல்கள்

அலுவலகங்கள் மட்டுமின்றி வீடுகளிலும் தவிர்க்க முடியாத தவிர்க்க முடியாத மின்சாதன பொருட்களுள் ஒன்றாக AC விளங்குகிறது. கோடை வெப்பத்தில் இருந்து நிவாரணம் அளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் பலரும் ஏ.சி. உபயோகிக்க விரும்புகிறார்கள். அது கோடை வெயிலுக்கு இதமளித்தாலும் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். சரும பாதிப்பு முதல் சுவாசக்கோளாறுகள் வரை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். ஏ.சி.யை அதிகம் பயன்படுத்துவதால் அனுபவிக்கும் 8 இன்னல்கள் குறித்து பார்ப்போம்.

உலர் சருமம்

ac யில் இருந்து வரும் வரும் குளிர்ந்த காற்று இயற்கையாக கிடைக்கும் ஈரப்பதத்தை இழுத்துக்கொண்டு செயற்கையாக நமக்கு தருகிறது. அவை சருமத்தில் அதிக நேரம் படர்ந்தால் சரும வறட்சி, சரும அரிப்பு ஏற்படக்கூடும். அதனால் குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருந்தால் காற்றில் ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்யும் 'ஹூமிடிபையர்' போன்ற ஈரப்பதமூட்டும் சாதனங்களை பயன்படுத்துவது நல்லது.

Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food

சுவாச பிரச்சினை

தூசு, நுண் துகள்கள், மாசுபட்ட காற்றில் கலந்திருக்கும் கிருமிகள் ஏ.சி. மூலம் பரவி ஒவ்வாமையையும், சிலருக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக்கோளாறு சார்ந்த பிரச்சினைகளையும் அதிகரிக்கச் செய்துவிடும். அதனால் ஏ.சி.யில் பொருத்தப்பட்டிருக்கும் பில்டர்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். அதன் மூலம் அறைக்குள் காற்றின் தரத்தை அதிகரிக்கச் செய்யலாம்.

வறண்ட கண்கள் - தொண்டைப்புண்

ஏ.சி. பயன்படுத்தப்படும் அறைக்குள் நிலவும் காற்றின் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் சிலருக்கு கண்கள் மற்றும் தொண்டையில் வறட்சி ஏற்படலாம். அப்படி கண்கள் வறண்டு போனால் மருத்துவரின் ஆலோசனை பெற்று கண் சொட்டு மருந்துகளை உபயோகிக்கலாம். நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இந்த அறிகுறிகளை குறைக்கலாம். காற்றில் ஈரப்பதத்தை நிலையாக தக்கவைக்க ஹூமிடிபையர்' போன்ற ஈரப்பதமூட்டும் சாதனங்களை பயன்படுத்துவதுதான் சரியான தீர்வாகவும் அமையும்.

Read Also: தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நகரங்கள் /water problems in cities in India

சோர்வு - தலைவலி

ஏர் கண்டிஷனர்களில் இருந்து வரும் குளிர்ந்த காற்று சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் தலைவலி, சோர்வை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள் ஏ.சி.யில் படிப்படியாக வெப்ப நிலையை உயர்த்துவதன் மூலமும், கை விசிறி பயன்படுத்துவதன் மூலமும் பாதிப்புகளை குறைக்கலாம்.

சளி தொந்தரவு

ac யில் அதிக நீரம் இருப்பதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளை சிலருக்கு ஏற்படுத்தலாம். ஏனெனில் ஏ.சி. மூலம் அறையில் படிந்திருக்கும் குளிரான சூழ்நிலையில் நோய் பரவும் கிருமிகள் உலவும் . அவை எளிதில் நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும். அதனால் ஏ.சி. அறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

Read Also: Ac இல்லாமல் கோடைகாலத்தை சமாளிக்காணுமா வாங்க! Managing without air conditioning tips
A C ஏற்படுத்தும் 8 இன்னல்கள்

இறுக்கமான தசைகள்

குளிர்ச்சியான சூழலில் நீண்ட நேரம் உட்காருவது அல்லது தூங்குவது தசைகளை இறுக்கமடைய செய்யும். மூட்டுக்கு அசவுகரியம் அளிக்கும். குறிப்பாக கீல்வாதம் போன்ற மூட்டு சார்ந்த பிரச்சினை உடையவர்களுக்கு பாதிப்பு அதிகமாகும். இரவில் ஏர்கண்டிஷனர் உபயோகிக்கும் போது அதில் வெப்பநிலையை அதிகரிக்க செய்யலாம். அல்லது போர்வை போர்த்தி சருமத்தை பாதுகாக்கலாம்.

நீரிழப்பு

AC இருந்து வரும் குளிர்ந்த காற்று தொடர்ந்து உடல்படும்போது குளிர்ச்சியை உணருபவர்கள் அதிகம் தண்ணீர் பருக தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இது நீரிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அதிலும் கோடை காலத்தில் ஏ.சி. அறையில் அதிக நேரத்தை செலவிடும் பட்சத்தில் போதுமான அளவு தண்ணீர் பருகுவதுதான் உடல் நீரேற்றமாக இருப்பதற்கு உதவி புரியும்.

Read Also: குழந்தைகளின் வளர்ச்சியும் பெற்றோரின் பங்கும்

தூக்கக்கோளாறு

ac யில் தூங்குவதால் அதிலிருந்து வரக்கூடிய குளிந்த காற்று சிலருக்கு தூங்குவதற்கு சிரமத்தை கொடுக்கலாம். போர்வைகள் அல்லது அவர்களின் வசதிக்கு ஏற்ப தூங்குவதற்கு ஏற்ற உடைகளை அணிந்து கொள்வதன் மூலம், படுக்கை அறையை சமமான வெப்பநிலையை பராமரித்தல் வழியாகவும் நல்ல தூக்கத்தை பெற முடியும்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook