அதீத சிந்தனையும்... மன நல பாதிப்புகளும் ....!

அதீத சிந்தனையும்... மன நல பாதிப்புகளும் ....!
'மனம் அமைதியை இழக்கும்போது பலரும் அதிகமாக சிந்திக்க தொடங்குவார்கள். அப்படி மிகையாக சிந்திப்பதும், எதிர்மறை எண்ணங்கள் தொடர்ச்சியாக மனதில் எழுவதும் நிம்மதியை குலைத்துவிடும். மன நலனை மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கச் செய்துவிடும். அதிகமாக சிந்திப்பதால் ஏற்படும் மனநலப் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!

கவனம் செலுத்துவதில் சிரமம்

'அதிகப்படியாக சிந்திப்பது அன்றாட பணிகளில் கவனம் செலுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும். நடந்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைத்து பார்ப்பது ,எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவது மன நலனை பாதிக்கும். சிந்தனை திறன் மற்றும் அறிவாற்றல் திறன் குறைவதற்கும் வழிவகுக்கும். எளிதாக செய்து முடிக்கக்கூடிய வேலையில் கூட கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்

மனச்சோர்வு

'அதிகப்படியான சிந்தனை எதிர்மறையான எண்ணத்துடன் தொடர்புடையது. அத்தகைய எதிர்மறையான எண்ணங்களும், சிந்தனைகளும் தொடர்ந்து வெளிப்படுவது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். கடந்த காலங்களில் எதிர்கொண்ட தோல்விகளையும், செய்த தவறுகளையும் மீண்டும் மீண்டும் நினைத்து பார்ப்பது மனதை பலவீனப்படுத்திவிடும்.

சோம்பல்

'அதிகமாக சிந்திப்பதால் ஏற்படும் மன அழுத்தம் நாள்பட்ட சோர்வு மற்றும் சோம்பலுக்கு வழிவகுக்கும். தொடர்ந்து சோம்பல், சோர்வுடன் இருப்பது அன்றாட செயல்பாடுகளை பாதிக்கும். தூக்கம் தடைபடக் கூடும். பதற்றம் போன்ற பிற மனநல பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வைத்துவிடும்.

Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா

கவலை

'அதிகப்படியான சிந்தனைக்கும் கவலைக்கும் பணங்களை சிதைக்கும். தேவையற்ற பீதியை உண்டாக்கும். பயத்தை அதிகப்படுத்தி வாழ்க்கையில் நிம்மதியை இழக்க செய்துவிடும்.

எரிச்சல்

'மனக்குழப்பம், அதிகப்படியான சிந்தனையுடன் தொடர்புடைய எதிர் மறை எண்ணங்கள் எரிச்சல் உணர்வை அதிகப்படுத்த செய்யும். மனம் ஊசலாடுவதற்கும் வித்திடும். சின்ன விஷயங்களுக்கு கூட மற்றவர்கள் மீது எரிச்சல் கொள்வார்கள். அது உறவுகளுக்குள் மனக்கசப்பை ஏற்படுத்தும். மன அழுத்தத்தையும் அதிகப்படுத்திவிடும்.

Read Also: The Role Of Tamilnadu Freedom Fighters In The India | இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு

தூக்கம் தடைபடும்

'அதிகமாக சிந்திப்பது தூக்கத்திற்கும் இடையூறை ஏற்படுத்தும். தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருந்தால் மனதை அமைதிப்படுத்துவதும், நிம்மதியான தூக்கத்தை பெறுவதும் கடினமாகிவிடும். இரவில் அடிக்கடி விழிப்பு வந்து தூங்க முடியாமல் தவிக்க வேண்டியிருக்கும்.

அதிகமாக சிந்திப்பதை தடுக்கும் வழிகள்

அதீத சிந்தனையும்..மன நல பாதிப்புகளும் ....!
'விரும்பத்தகாத சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மனநிலையை மேம்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இனிமையான இசையை கேட்பது, வாசிப்பது மனதை லேசாக்கும். கவனத்தை திசை மாற்றவும் உதவும்.

Read Also: Vinayaka Chaturthi Story In Tamil, ஏன் விநாயகர் சிலையை நீரில் கரைக்கிறார்கள்?
'உங்களுக்குள் ஏற்படும் கவலைகள் பற்றி குடும்ப உறுப்பினர் அல்லது நம்பகமான நண்பரிடம் பேசுவது ஆறுதல் தேடி தரும்.

'இயற்கையான சூழல் கொண்ட இடங்களில் நேரத்தை செலவழிப்பது மனதை நிதானப்படுத்த உதவும். ஏரியில் படகு சவாரி செய்வது, பூங்காவில் நடப்பது, குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

'நடைப்பயிற்சி செய்வது எண்டோர்பின் ஹார்மோன் வெளியீட்டை தூண்டும்.மன நிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கும்.

'ஆழ்ந்த சுவாசப்பயிற்சிகள் செய்வது உடலை தளர்வடைய செய்யும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். மனத்தெளிவை உண்டாக்கும். மன அழுத்தத்தில் இருக்கும்போது அதிகம் சிந்திப்பதை தடுக்க ஆழ்ந்த சுவாசப்பயிற்சி செய்வது அவசியமானது.

'நடந்து முடிந்த பிரச்சினை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதற்கு பதிலாக அதற்கு தீர்வு காண முயற்சியுங்கள். அதன் மீது கவனம் செலுத்தும்போது தேவையற்ற சிந்தனை எழாது.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook