இளமையை தக்கவைக்கும் கொரிய பழக்கங்கள் '8 '- ThaenMittai Stories

இளமையை தக்கவைக்கும் கொரிய பழக்கங்கள் '8 '

கொரியர்கள் பொதுவாகவே இளமையான தோற்றத்துடனும், பொலிவான சரும அழகுடனும் காட்சி அளிப்பதற்கான காரணம் குறித்து எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிர்களா ?அது அவர்களின் மரபியல் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல, அவர்கள் பின்பற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் தான் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அது என்ன என்பதை பார்க்கலாம்.

Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்

சரும பராமரிப்பு:

கொரியர்கள் காலையில் எழுந்ததும் சருமத்தை சுத்தம் செய்தல், முகத்தை கழுவி ஈரமாக்குதல் போன்ற சரும பராமரிப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுகிறார்கள். எண்ணைய், கிரீம் போன்ற அதற்குரிய அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவை பெரும்பாலும் செயற்கை ரசாயனங்கள் கலகதவையாக இருக்கின்றன. பாரம்பரிய சடங்கு போல் பின்பற்றும் இந்த பழக்கம் தான் சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும், பொலிவாகவும், வைத்திருக்க உதவுகிறது.

சன்ஸ்க்ரீன் பயன்பாடு:

சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். மேகமூட்டமாக நாட்களில் கூட சன்ஸ்க்ரீனை தவறாமல் பயன்படுத்துகிறார்கள். விரைவில் தோல் சுருக்கம், சரும எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நேராமல் தற்காத்து கொள்ள அவையை உதவுகின்றன.

Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை

புளிப்பு வகை உணவு:

கிமிட்சி, கோட்சுஜன்க் போன்ற புளிக்கவைக்கப்ட்ட உணவுகளை விரும்பி மேற்கொள்கிறார்கள். அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இளமை பொலிவுக்கு வித்திடும் ப்ரோபையோடிக்க்குகள் நிறைந்தவை.

இளமையை தக்கவைக்கும் கொரிய பழக்கங்கள் '8 '
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை

நீர் அருந்துதல்:

காலையில் எழுந்ததில் இருந்தே தண்ணீர் பருகுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் தண்ணீர் மிகவும் அவசியமாகவும், உதவியாகவும் இருக்கும். கொரியர்கள் காலையில் இருந்தே நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதை ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு இடையே தவறாமல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். நாள் முழுவதும் தண்ணீர் அருந்துதுவதால் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள்.

தூக்கம்:

ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், பொலிவான சருமத்துக்கும் தூக்கம் அவசியமானது. கொரியர்கள் தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இரவு வேளையில் தூக்கத்தை கெடுக்கும் எந்த பழக்கத்தையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. சரியான நேரத்திற்கும் தூங்குவதை வழக்கமாக்குகிறார்கள்.

விறுவிறுப்பான நடைப்பயிற்சி:

கொரியர்களின் உடற்பயிற்சி வழக்கத்தில் விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் செய்கிறார்கள். அதுவும் உடல் இயக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. நடன பயிற்சியையும் ஆர்வமாக மேற்கொள்கிறார்கள்.

மனஅழுத்தம்:

மனஅழுத்தம் முக பொலிவை சீர்குலைக்கும். கொரியர்கள் தியானம், இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது போன்ற பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை விரட்டி அடிக்கிறார்கள்.

Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்

உணவு வழக்கம்:

கொரியர்கள் அவசர கதியில் உணவு உட்கொள்வதில்லை. உணவை நன்றாக மென்று ருசித்து சாப்பிடுகிறார்கள். அது செரிமானம் சீராக நடைபெறவும், உடல் எடையை அதிகரிக்காமல் தொடர்ந்து எடையை சீராக பார்த்துக்கொள்ளவும் வழிவகுக்கிறது. மேலும் அவ்வாறு உணவு நன்றாக மென்று சாப்பிடும்பொழுது ,உணவு நன்றாக செரிக்கப்படுவதால் சோம்பேறி என்பது இல்லாமல், சாப்பிட்டதும் தூங்க வேண்டும் என்றும் உணர்வு இருப்பதும் இல்லை என்கிறார்கள்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook