18 முதல் 19 வயது வரை..
நம் நாட்டில் 18 வயது நிரம்பியவர்கள் தேர்தலில் ஒட்டுப்போடலாம். இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களில் சுமார் 97 கோடி பேர் வாக்காளர்களாக உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 69.2 சதவீதம் ஆகும்.
மக்கள் தொகை விகிதத்துடன் ஒப்பிடும் போது தெலுங்கானாவில்தான் வாக்காளர்கள் சதவீதம் அதிகமாக உள்ளது.3 கோடியே 80 லட்சம் மக்கள்தொகையை கொண்ட அந்த மாநிலத்தில் 3 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 86.3 சதவீதம் ஆகும்.
Read Also: Vinayaka Chaturthi Story In Tamil, ஏன் விநாயகர் சிலையை நீரில் கரைக்கிறார்கள்?
வாக்காளர்கள் சதவீதம் மிகவும் குறைவான மாநிலம் பீகார். 12 கோடியே 90 லட்சம் மக்கள் வசிக்கும் அந்த மாநிலத்தில் 7 கோடியே 70 லட்சம் வாக்காளர்களே உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 59.6 சதவீதம் ஆகும்.
வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில்தான் என்கிறார்கள். ஆனால் பல மாநிலங்களில் வாக்களிப்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 18 முதல் 19 வயது வரையுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 4 கோடியே 90 லட்சம்.ஆனால் இவர்களில் வெறும் 38 சதவீதம் பேரே தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது சுமார் 1 கோடியே 80 லட்சம் பேர்தான் ஓட்டுப்போட விரும்பி தங்கள் பெயர்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.
பீகார், டெல்லி, உத்தரபிரதேசம் மாநிலங்களில் நிலைமைமிகவும் மோசமாக உள்ளது. உத்தரபிரதேசத்தில் புதிதாக 23 சதவீதம் பேரும், டெல்லியில் 21 சதவீதம் பேரும்,பீகாரில் வெறும் 17 சதவீதம் பேரும் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துள்ளனர்.
புதிய வாக்காளர்கள் பதிவு விஷயத்தில் தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.தெலுங்கானாவில் 18 முதல் 19 வயது வரையிலான இளைஞர்களில் 67 சதவீதம் பேரும், ஜம்மு காஷ்மீரில் 62 சதவீதம் பேரும், தமிழ் நாட்டில் 50 சதவீதம் பேரும் வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்து இருக்கிறார்கள்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளம் வயதினர் அதிக ஆர்வம் காட்டாததற்கு படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதில் உள்ள பிரச்சினை, அரசியல் கட்சிகள் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதது; அவர்களை தேர்தலில் நிறுத்தாதது போன்றவை காரணமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
பீகாரை பொறுத்தமட்டில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஏராலமான இளைஞர்கள் படிப்பதற்காகவும், வேலைக்காகவும் வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளனர். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் மட்டுமே அவர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதனால் அவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள்பெயரை சேர்ப்பது மிகவும் குறைவாக உள்ளது.
வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து தேர்தல் கமிஷன் என்ன தான் விழிப்புணர்வு பிரசாரம் செய்தாலும், அதற்குரிய பலன் கிடைப்பது இல்லை என்றே இதன்மூலம் தெரியவருகிறது.
ஒரே தொகுதியில் 185 பேர் போட்டி
2019 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 8039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதில் அதிகபட்சமாக தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் 185 பேர் மோதினார்கள்.எஹற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலம் பெலகவி தொகுதியில் 57 பேரும்,தமிழகத்தில் கரூர் தொகுதியில் 42 பேரும், தென் சென்னையில் 40 பேரும் ,தூத்துக்குடியில் 37 பேரும் போட்டியிட்டனர்..