Inspiring Real Life Stories In Tamil | வலிகள் தான் உன்னை செதுக்கும் உளிகள்!

வலிகள் தான் உன்னை செதுக்கும் உளிகள்

நிறைய நேரங்களில் கஷ்டங்கள் வரும்போது நாம் அந்த கஷ்டங்களை களைவதற்கான தீர்வுகள் தேடுவதை தவிர்த்து விட்டு அந்த பிரச்சனைகளை ஏன் கொடுத்தாய் கடவுளே என்று கூறுவார்கள். இருக்கின்ற பிரச்சினைகள் போதாது என்று இன்னும் தொடர்ந்து நமக்கு பல பிரச்சினைகள் வரும் போது, நாம் கட்டுப்பாட்டை இழந்து மனம் தளர்ந்து தன்னம்பிக்கை இழந்து விடுகிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உண்டு நம்பிக்கையோடு நாம் எழுந்து போராடுவோம்!.
Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஓர் இசைக் கலைஞர் இருந்தார். பாடல்களுக்கான சங்கேத குறியீடுகளில் கைதேர்ந்த அவர் ரொம்ப பிரபலமாக இருந்தார். அவர் ஒரு பெரிய இசைக்கலைஞர் அவர் நாற்பது ஆண்டுகள் பேரும் புகழுமாக செல்வச் சிறப்போடு ரொம்பவே சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். அவர் தான் உலக புகழ்ப்பெற்ற இசை மேதை ஜார்ஜ் ஹாரிசன். ஒருநாள் அவருக்கு ஒரு பெரிய பிரச்சனை வருகிறது. அது என்னவென்றால் திடீரென்று இசை மேதை ஜார்ஜ் ஹாரிசனுக்கு பக்கவாத நோய் ஏற்படுகிறது.
இதனால் அவர் உடளவிலும், மனதளவிலும் ரொம்பவே பாதிக்கப்படுகிறார். தேடித்தேடி மருத்துவம் பார்க்கிறார்கள் எந்த மருத்துவமே அவருக்கு பலன் அளிக்கவில்லை. ஆகையால் அவரை பார்ப்பதற்கு அவருடைய ரசிகர்கள் உறவினர்கள் எல்லோருமே வராமல் போகிறார்கள். அந்த நேரத்தில் அவரைப் பார்த்து சிலர் சொல்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் உள்ள நீரூற்றுகளில் சில நாட்கள் தங்கி நீராடினால் குணமாகிவிடும் என்றார்கள். உடனே அங்கு சென்று அவர் 16 நாட்கள் தங்கி நீரோட்டத்தில் நீராடினர். இருந்தாலும் பலன் எதுவுமே அளிக்கவே இல்லை.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
அவருடைய நிலைமை அப்படியேதான் இருக்கிறது. அப்போது அவருக்கு திடீரென ஞாபகம் வருகிறது. எந்நாளுமே இறைவனிடம் முறையிடுவது மட்டுமே கடவுள் பக்தி என்பது இல்லை. இறைவனிடம் நாம் எந்த ஒரு வேண்டுதலும் வைத்தது இல்லை என்று ஓடினார். கொஞ்சம் சில நாட்களில் விரைவிலேயே அவர் உடல் நோய் குணமாக ஆரம்பிக்கிறது. அந்த நேரத்தில் அவருக்கு வேறொரு பிரச்சினை வருகிறது. இவ்வளவு நாள் பேரும் புகழுடன் இருந்த அந்த இசை மேதையின் இசை அமைக்கும் சக்தி குறைந்து போகிறது. பாடல்களுக்கான சங்கீத குறியீடுகள் எழுதுகிற அந்த சக்தி குறைந்து விடுகிறது. அதனால் அவருக்கு முன்பு மாதிரி வருமானம் இல்லாமல் போய்விடுகிறது. அவர் வறுமையின் கோரப் பிடியில் அகப்பட்டு ரொம்பவே கஷ்டப்படுகிறார். லண்டன் வீதியில் பைத்தியக்காரன் மாதிரி அலைந்து திரிகிறார். அப்படி ஒரு கொடூரமான நிலைமைக்கு அவர் தள்ளப்படுகிறார்.

Inspiring Real Life Stories In Tamil, வலிகள் தான் உன்னை செதுக்கும் உளிகள்
அவர் மனசு ரொம்பவே நொந்து போகிறார். கடவுளை பார்த்து கேட்கிறார் தெய்வமே இப்படி இப்படி அலைவதற்காக என்னை அந்த ஒரு கொடுமையான நோயிலிருந்து மீட்டினாய் என்று புலம்பிக் கொண்டு வீட்டிற்கு போகிறார். மனசுக்குள்ள அவர் நினைக்கிறார் எப்படியும் நான் இதிலிருந்து மீண்டு வருவேன். அப்படி நினைத்துக் கொண்டு வீட்டிற்கு உள்ளே சென்றதும் அவருக்காக ஒரு கடித தொகுப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது அவரோட கண்களில் படவே அதை எடுத்து பார்க்கிறார்.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
அவை அனைத்தும் தெய்வத்தைப் பற்றிய பாடல் வரிகள். தாமதம் செய்யாமல் இதற்கு உடனடியாக இசையமைத்து குறிப்பு எழுதுங்கள் இது இறைவனின் உத்தரவு என்று அந்த கடிதத்தில் இருக்கிறது. பிரபலமான கவிஞர் அந்த வேண்டுகோளை அவருக்காக அனுப்பி இருக்கிறார். அந்த வரிகள் என்னவென்றால் “உலகம் வெறுத்தது உள்ளவர் எவரும் அவனுக்கு முன் வரவில்லை உதவி செய்ய இரக்கம் கொண்ட எங்கு உள்ளார் என இயங்கியலின் தான் வீதி எங்கும் ஓடி மறைந்தனர் அப்போதே” இந்த பாடல் வரிகள் அவரோடு கண்ணில் படுகிறது.
நம்முடைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். மேலும் அந்த இசை மேதைக்கு ஒரு புது தெம்பு கிடைக்கிறது. காணாமல் போயிருந்த சங்கீத குறியீடுகள் மீண்டும் அவருக்குள் வருகிறது. புது உற்சாகத்துடன் ஒரு புது மனநிலையோடு இசையமைக்க வருகிறார். வெறும் 24 நாட்களில் ஒரு அற்புதமான இசை அமைப்பை உருவாக்கி தருகிறார். அது ரொம்பவே பிரபலம் ஆகிறது பழையபடி பெயரும் புகழும் அடைகிறார். ரொம்பவே சந்தோஷம் அடைகிறார்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
பைத்தியக்காரன் மாதிரி அலைந்து திரிந்த அவர் உலகப் புகழ்பெற்ற இசைமேதை ஆனார். கடினமான சூழ்நிலையிலும் வாழவைத்த தெய்வம் எப்படியும் உயர்வளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த ஒரு உற்சாக கதையை நம் மனதிற்குள் நினைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். எப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கும். நாம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை மனம் தளராமல் மீண்டும் வருவேன் என்கிற நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!. நன்றி!

Related Tags

வலிகள் தான் உன்னை செதுக்கும் உளிகள் | Motivation Story In Tamil | Motivation Story In Tamil | Tamil Motivational Short Stories | Tamil Motivational Small Stories | Tamil Stories Motivational | Short Motivational Stories In Tamil | Small Motivational Story In Tamil | Students Motivational Story In Tamil | Success Stories In Tamil | Tamil Entrepreneur Stories | Tamil Inspirational Stories | Tamil Motivation Stories | Tamil Motivation Story.

Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook