Multitasking Skills | ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது எப்படி?

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது எப்படி?

எதுவும் செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறி அல்ல!. தன்னால் முடிந்ததை செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே என்று கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் சொல்லி இருக்கிறார். சாதாரணமாக நாம் ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம் என்றால் அந்த வேலையை முழுவதுமாக முடிக்கிற வரைக்கும் வேறு எந்த வேலையையும் செய்வது இல்லை. ஏனென்றால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது என்பது கடினமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் வேற ஏதாவது பிரச்சனைகள் வந்து விடுமோ? என்ற பயம் இருக்கும்.
Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு
துருக்கி நாட்டில் ஒரு இளம் அரசர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு நன்றாக ஆட்சி செய்வது எவ்வளவு பிடிக்குமோ அதே மாதிரி வேட்டைக்கு செல்வது பிடிக்கும். அதுவும் தனியாக வேட்டையாடுவது என்றால் ரொம்பவே பிடிக்கும். அந்த மாதிரி அவர் அடிக்கடி வேட்டைக்கு போவார். அப்படி ஒரு நாள் அந்த ராஜா வேட்டைக்கு கிளம்பி போனார். வேட்டையாடுவதிலேயே கவனம் இருந்ததால் அவர் அன்றைக்கு அரண்மனைக்கு திரும்புவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது.
இரவு நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால் அந்த இரவை அங்கேயே கழிக்கலாம் என்று முடிவு செய்கிறார். எங்கே தங்குவது என்று யோசித்து கொண்டு கொஞ்ச தூரம் கடந்து வந்து பார்க்கும்போது அவர் கண்ணுக்கு ஒரு வெளிச்சம் தெரிகிறது. அந்த இடத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்கலாம் என்று செல்கிறார். அது ஒரு நெசவாளியோட வீடு அவரும் அங்கு தங்குவதற்கு அனுமதி கொடுக்கிறார். ஆனாலும் அங்கே அவர் வீட்டுக்கு வந்து இருப்பது ஒரு அரசன் என்பது தெரியாது.
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
யாரோ ஒரு வேட்டைக்காரன் தங்க இடம் கேட்டு வந்து இருக்கான் என்று நினைத்துக் கொள்கிறார். ஆகையால் அங்கு தங்குவதற்கு வசதி செய்து கொடுக்கிறார். இந்த நெசவாளரின் வீட்டிலேயே அன்றைய இரவுப்பொழுது கழிந்து விடுகிறது. மறுநாள் காலையில் ஒரு சத்தம் கேட்டு கண் விழித்த மன்னன் எழுந்து பார்க்கிறான். அப்போது அந்த நெசவாளி நூலை நூற்க தொடங்கி இருந்தார். அப்போது அவருடைய எடுத்து கையில் ஒரு கயிறு ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது.
அதை பார்த்த அந்த அரசன் நெசவாளியைப் பார்த்து இது ஏன் உன்னோட இடது கையில் ஒரு கயிறு ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது கேட்கிறார். அதற்கு அந்த நெசவாளி பதில் சொல்கிறார் அங்கு இருக்கிற தொட்டிலில் என்னுடைய குழந்தை தூங்கிக் கொண்டு இருக்கிறது. அது அழுகும் போது இந்த கயிற்றை இங்கே இருந்து இழுப்பேன். அதனால் தொட்டில் ஆடும் சிறிது நேரத்திலேயே குழந்தை அழுகை நின்று விடும். அதற்காக தான் நான் அந்த கயிறு கட்டி இருக்கிறேன் என்று சொல்கிறார்.
Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்
அந்த நெசவாளி மறுபடியும் நூலை நூற்க தொடங்குகிறார். அந்த நெசவாளியின் பக்கத்திலேயே ஒரு நீளமான குச்சி ஒன்று வைத்திருக்கிறார். அதையும் பார்த்த அந்த அரசன் இது எதற்காக என்று கேட்கிறார். அந்த நெசவாளி பதில் சொல்கிறார் என் மனைவி வாசலில் தானியங்களை வெயிலில் காய வைத்து விட்டு போய் இருக்கிறார். அதை காகம், குருவி மாதிரி ஏதாவது சாப்பிட வரும் அப்போது நான் இந்த குச்சியை கொண்டு ஆட்டுவேன். அந்தக் குச்சியின் அடுத்த முனையில் கருப்புக் கொடி ஒன்று கட்டி இருக்கிறது.
அதை பார்த்தால் எந்த பறவையும் தானியங்கள் பக்கத்தில் வராது என்று சொல்கிறார். இதற்கிடையில் நெசவாளியின் இடுப்பில் மணிகள் கட்டி இருக்கிறது. அதையும் அரசன் பார்த்துவிட்டு இது எதற்காக கட்டி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அப்போது நெசவாளி சொல்கிறார் இந்த வீட்டில் எலிகள் நிறைய இருக்கிறது. அது எப்போ பார்த்தாலும் அந்த இயற்கை உணவு தானியங்களை சாப்பிட வரும். அப்போது நான் இந்த மணிகள் அசைக்கும் போது அந்த சத்தங்களை கேட்டு திரும்பி ஓடி விடும் என்று பதில் சொல்கிறார்.
Multitasking Skills, ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது எப்படி?, ThaenMittai Stories
அரசன் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறார் அங்கே சின்ன பசங்க முகம் தெரிகிறது. அரசன் நெசவாளியைப் பார்த்து கேட்கிறார் அந்த பசங்க வெளியே என்ன செய்கிறார்கள்? நெசவாளி அவரோட வேலையை செய்து கொண்டே பதில் சொல்கிறார். நான் தனியே இருக்கும் போது என்னுடைய வாய் சும்மா தானே இருக்கிறத. அந்த நேரங்களில் அவங்களுக்கு எனக்கு தெரிந்த பாடங்களை சொல்வேன். அவர்கள் வெளியிலிருந்து கேட்டு கொள்வார்கள் என்று சொல்கிறார்.

Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
உடனே அரசன் ஏன் அவர்கள் வெளியில் நிற்கிறார்கள் உள்ளே வரலாம் தானே என்று கேட்கிறார். நான் சொல்லும் பாடங்களை காதில் தானே கேட்டு கொள்வார்கள். அந்த நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்து தரும் படி செய்து உள்ளேன் என்றார். ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்கள் அவர்களால் செய்ய முடியுமா? என்று அரசனுக்கு ஒரே ஆச்சரியம் தாங்க முடியவில்லை வியந்து போய் நிற்கிறார்.

மேலும் அவரைப் பார்த்து நெசவாளி சொல்கிறான் இது மட்டுமில்லை என் மனைவி ஒரு கிரேக்க நாட்டுப் பெண். அவள் ஒவ்வொரு நாளும் 10 கிரேக்க சொற்களை ஒரு சீட்டில் எழுதி வைத்து விட்டு போவார். நான் வேலை செய்துக் கொண்டே அதையும் கற்றுக் கொண்டு வருகிறேன் என்றார் நெசவாளி. ஒருவர் விரும்பினால், முயற்சி செய்தால், ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத்தரவும், வேலை செய்யும் வீட்டை கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளித் தான் சாட்சி. நமது சோம்பேறித் தனத்திற்கு காரணம் கற்பித்துக் கொண்டிருக்காமல் தொடர்ச்சியான உழைப்பினை தந்து தோல்விகளை துரத்தினால் வெற்றி நமதே!.

Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
மிகவும் கடினமான பணியில் ஈடுபடுத்திக் கொண்டு, அதை திறமையாக செய்து முடிக்கும் மனிதனுக்கு, எல்லா பரிசுகளும் அவனுக்கு தானாகவே வந்து சேரும். இந்த கதையை படிக்கிற உங்களுக்கும் மனதில் தோன்றுகிறதா? நாம் செய்வதெல்லாம் கஷ்டமான வேலை இல்லை என்று. ஆம்!, நிச்சயமாக இதுதான் உண்மை நம்மிடம் பல திறமைகள் இருக்கிறது. அதை நாம் வெளிக்கொண்டு செயல்படுவோமானால் அது நமக்கு மட்டுமில்லை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும். முயற்சி செய்வோம்! தன்னம்பிக்கையுடன் இருப்போம்!!. நினைத்தை செய்து முடிப்போம்!!!. மீண்டும் ஒரு நல்ல தன்னம்பிக்கை தரக்கூடிய கதையோடு சந்திப்போம். நன்றி!

Related Tags

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது எப்படி? | Life Story In Tamil | Moral Stories In Tamil For College Students | Motivation Kathai In Tamil | Motivation Small Story In Tamil | Motivation Stories In Tamil | Motivation Story In Tamil | Motivation Tamil Story | Motivational Short Story In Tamil | Motivational Small Story In Tamil | Motivational Stories In Tamil For Students | Motivational Story For Students In Tamil | Motivational Success Stories | Motivational Success Stories In Tamil | One Minute Story In Tamil | Positive Stories In Tamil.

Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook