நடிகர் மாதவனின் உடல் எடை குறைப்பு ரகசியம்-ThaenMittai Stories

நடிகர் மாதவனின் உடல் எடை குறைப்பு ரகசியம்

நடிகர் மாதவன் “ராக்கெட்ரி' படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார். தற்போது உடல் எடையை குறைத்து தனது வழக்கமான 'ஸ்டைலிஷ்'தோற்றத்தில் காட்சி தருகிறார். 21 நாட்களில் இந்த உடல் எடை குறைப்பு செயல் முறையை சாத்தியமாக்கி இருக்கிறார். இதற்காக அவர் ஜிம்முக்கு சென்று பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஓட்டப்பயிற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. தியானமும் செய்யவில்லை.

Read Also: சரும அழகை பராமரிக்கணுமா? அப்போ தினமும் இதை பண்ணுங்க !
உணவு வழக்கத்தில் ஒருசில கட்டுப்பாடுகளை மட்டுமே பின்பற்றி இருக்கிறார். ஒவ்வொருமுறை சாப்பிடும் போதும் உணவை 45 முதல் 60 முறை நன்கு மென்று உட்கொள்ளும் வழிமுறையை கடைப்பிடித்திருக்கிறார். மதியம் 3 மணிக்கு பிறகு சமைக்காத உணவுகள் எதையும் சாப்பிடவில்லை. மாலை 6.45 மணிக்குள் இரவு உணவை சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றி வந்திருக்கிறார். அந்த உணவு நன்கு சமைக்கப்பட்ட உணவாக இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்திருக்கிறார்.

அதிகாலையில் நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்வது, இரவில் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொள்வது, தூங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு செல்போன், டி.வி. உள்ளிட்ட சாதனங்களை பார்ப்பதை தவிர்ப்பது, நிறைய திரவ வகை உணவுகளை உட்கொள்வது, பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது, எளிதில் வளர்சிதை மாற்றமடையும் ஆரோக்கியமான உணவுகளில் மட்டுமே கவனம் செலுத்துவது,பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது போன்ற கட்டுப்பாடுகளை கடைப்பிடித்திருக்கிறார்.

Read Also: நீங்க உயரம் குறைந்தவரா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க !உயரமாக தோற்றமளிக்க 'ஸ்டைலிஷ் டிப்ஸ் !
உடல் எடையை எவ்வாறு அதிகரிப்பது? அதை விரைவாகக் குறைப்பது எப்படி? என்பதைக் கண்டறிய நிறைய ஆராய்ச்சிகளை செய்ததாகவும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த வீடியோவில் கூறி இருக்கிறார். 'இன்டர்மீட்டண்ட் பாஸ்ட்' எனப்படும் இடைப்பட்ட உண்ணாவிரதம் மூலம் இந்த உடல் எடை குறைப்பு யுக்தியை கையாண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

என்ன நன்மை கிடைக்கும்?

இடைப்பட்ட உண்ணாவிரதம் இன்சுலின் அளவை குறைக்க உதவும். இதன் மூலம் உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கும். கொழுப்பை எரிக்க உதவும். மேலும் கலோரி உட்கொள் இந்த அணுகுமுறைளும் அளவை குறைப்பதோடு வளர்சிதை மாற்ற திறனையும் மேம்படுத்தும். ஒரு முறை வாய்க்குள் ஊட்டும் உணவை 46 முதல் 60 முறை நன்கு மென்ற பிறகே வயிற்றுக்குள் அனுப்பும்போது செரிமானத்திறன் மேம்படும்.

Read Also: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 - ஏ தேர்வுக்கு, தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
ஊட்டச்சத்துக்கள் முறிந்து உடலுக்குள் கலப்பதற்கு உதவும். அதிகப்படியாக உணவு உட்கொள்வதும், தவிர்க்கப்படும். அதிக கலோரிகளை சாப்பிடுவதும் தவிர்க்கப்படும். இடைப்பட்ட உண்ணாவிரதம் இருக்கும் நேரத்தை தவிர மற்ற சமயங்களில் பச்சைக்காய்கறிகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்துகளின் முழுமையாக நன்மைகளை பெற முடியும்.

இடைப்பட்ட உண்ணாவிரதம்' என்றால் என்ன?

உணவு உட்கொள்வது, பின்பு குறிப்பிட்ட காலம் வரை உணவை உட்கொள்ளாமல் இருப்பது இந்த இரண்டுக்கும்இடையேயான காலகட்டத்தை குறிப்பிடுவதுதான், இடைப்பட்ட உண்ணாவிரதம் எனப்படும். இந்த உண்ணாஅந்த சமயங்களில் இடையிடையே தண்ணீர் பருகலாம். டீ, விரத காலம் 12 மணி முதல் 20 மணி நேரம் வரை நீடிக்கும். காபி பருகுவதாக இருந்தால் அதில் சர்க்கரையோ, பாலோ சேர்க்கக்கூடாது, இந்த உண்ணா விரதத்தில் 16/8 என்ற நடைமுறை பொதுவாக பின்பற்றப்படுகிறது. அதன்படி 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பார்கள். 8 மணி நேர காலகட்டத்தில் சாப்பிடுவார்கள். 5:2 என்ற மற்றொரு முறையும் இருக்கிறது.இதில் வாரத்தில் 5 நாட்கள் சாப்பிடுவார்கள். மற்ற இரண்டு நாட்களில் உட்கொள்ளும் உணவுகளில் கலோரி அளவுகளை மட்டும் 500 முதல் 600 வரை குறைத்துக் கொள்வார்கள். மிக கடுமையான உண்ணாவிரத முறையை பின்பற்றுபவர்கள் வாரத்திற்கு ஒருமுறையோ, இரண்டுமுறையோ தொடர்ந்து 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பார்கள். உதாரணமாக இரவு 7 மணிக்கு உணவு உட்கொண்டால் மறுநாள் இரவு 7 மணி வரை சாப்பிடக்கூடாது.

நடிகர் மாதவனின் உடல் எடை குறைப்பு ரகசியம்
இடையில் தண்ணீர் பருகிக்கொள்ளலாம். டீ, காபியில் சர்க்கரையோ, பாலோ சேர்க்கக்கூடாது.இந்த உண்ணாவிரத முறையை சுயமாக மேற்கொள்ளக் கூடாது. மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அவரவர் உடல்நலத்திற்கு ஏற்ப மேற்கொள்வதுதான் சரியானது.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook