இந்திய தொலைத்தொடர்பு துறை உதவியுடன் தொலைந்த ஸ்மார்ட் போன்களை கண்டுபிடிக்கலாம்..!

இந்திய தொலைத்தொடர்பு துறை உதவியுடன் தொலைந்த ஸ்மார்ட் போன்களை கண்டுபிடிக்கலாம்..!

நாம் வாழும் இந்த தொழில்நுட்ட உலகில் திறன்பேசி எனப்படும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாத மனிதர்களே கிடையாது. சிறியவர் பெரியவர் வரை எல்லோரது அன்றாட வாழ்விலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. மற்றவர்களுடன் பேசவும், குறுஞ்செய்திகள் அனுப்பவும், தங்களது சொந்த தகவல்கள் அனைத்தையும் சேமித்து வைக்கவும் ஸ்மார்ட்போன் பயன்படுகிறது. அப்படிப்பட்ட ஸ்மார்ட்போனை ஒருவர் தொலைத்துவிட்டால் சோகமான நிலைக்கு சென்று விடுகிறார். அந்த நிலையை மாற்றிட, தொலைந்த மற்றும் திருடு போன ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க இந்திய தொலைத் தொடர்பு துறை ஓர் இணையதளத்தை உருவாக்கி இருக்கிறது. அதுபற்றி தெரிந்து கொள்வோம். தொலைந்த ஸ்மார்ட்போனை மீட்போம்.

இணையதளத்தின் பெயர் என்ன?

‘சி.இ.ஐ.ஆர்' சென்ட்ரல் எக்குயூப்மெண்ட்ஐடென்டிபை ரெஜிஸ்டர் (Central Equipment·dentity Register) என்பது இந்திய தொலைத்தொடர்பு துறையின் புதிய இணையதள முன்னெடுப்பு.

Read Also: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 - ஏ தேர்வுக்கு, தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

எப்படி பயன்படுத்துவது?

www.ceir.gov.in எனும் இணையதள முகவரிக்கு சென்று ஸ்மார்ட்போன் உரிமையாளர சுயவிவரம், ஐ.எம்.இ.ஐ. எண், சிம் எண்,ஸ்மார்ட்போன் தொலைந்ததும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த கடிதத்தின் டிஜிட்டல் நகல் ஆகிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

இணையதளத்தால் என்ன பயன்?

சி.இ.ஐ.ஆர். இணையதளத்தில் ஸ்மார்ட் போன் திருடப்பட்டது என தகவலை பதிவு செய்ததும், உங்கள் ஸ்மார்ட்போனின்" ஐ.எம்.இ.ஐ. எண் பிளாக் செய்யப்படும்.அதன்பின் உங்களது ஸ்மார்ட்போன் செயல் இழந்துவிடும். அதற்கு பிறகும், யாராவது புதிய சிம் மூலம் பயன்படுத்த முயற்சித்தால் அந்த தகவல் சி.இ.ஐ.ஆர். மூலம் காவல் துறைக்கு உடனடியாக பகிர்ந்தளிக்கப்படும்.

Read Also: நீங்க உயரம் குறைந்தவரா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க !உயரமாக தோற்றமளிக்க 'ஸ்டைலிஷ் டிப்ஸ் !

திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களை மீட்க சி.இ.ஐ.ஆர். என்ன செய்கிறது?

ஸ்மார்ட்போனை திருடியதும் ஐ.எம்.இ.ஐ. எண்ணை மாற்றி போலியான எண்களை உருவாக்கி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த முயற்சி செய்கின்றனர். சி.இ.ஐ.ஆர். இணையதளத்திற்கு ஒரு ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டது அல்லது திருடப்பட்டது என்று தகவல் கிடைத்ததும் அந்தக்குழுவில் உள்ளவர்கள் பேட்டன் அனாலிசிஸ் மூலம் போலியாக இருக்கும் ஐ.எம்.இ.ஐ. எண்ணை கண்டுபிடித்து அதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் இதனால் ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு ஸ்மார்ட்போன் இருக்கும் இடம் உடனடியாக மாறுவதை கண்டறிய முடியும். அதே போல ஒரே ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து பல ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதையும் கண்டுபிடிக்க முடியும்.

Read Also: சரும அழகை பராமரிக்கணுமா? அப்போ தினமும் இதை பண்ணுங்க !

திருடியவர்களையும், ஸ்மார்ட் போனையும் கண்டுபிடிக்க முடியுமா?

சி.இ.ஐ.ஆர். குழுவினர் திருடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் பற்றிய தரவுகள் கிடைத்ததும் காவல் துறையினருக்கு ஸ்மார்ட்போன் இருக்கும்.இடத்தை உடனடியாக தெரிவிக்கின்றனர். அதனை வைத்தும் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்தும் விசாரித்து தொலைந்த ஸ்மார்ட்போன்களை மீட்பதுடன், திருடியவர்களையும் கைது செய்கிறார்கள்.

தொலைந்த ஸ்மார்ட்போன் மீட்கப்பட்டால், அது இயங்குமா

உங்கள் ஸ்மார்ட்போன் கிடைத்ததும் சி.இ.ஐ.ஆர். இணையதளத்துக்கு சென்று ‘அன்பிளாக்' செய்ய வேண்டும். அதன் பின்னர் தான் உங்கள் ஸ்மார்ட் போன் வழக்கம்போல செயல்பட தொடங்கும்.

இணையதளத்தை தாண்டி உதவி எண் இருக்கிறதா?

இந்திய தொலைத்தொடர்பு துறை உதவியுடன் தொலைந்த ஸ்மார்ட் போன்களை கண்டுபிடிக்கலாம்..!
இணையதளத்தை பயன்படுத்த வாய்ப்பு இல்லாதவர்கள் சி.இ.ஐ.ஆர். உதவி எண்ணான (14422) என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டும் உங்கள் செல்போன் குறித்த தகவல்களை கொடுக்கலாம். மேலும், இதற்கென வடிவமைக்கப்பட்ட அப்ளிகேஷன் வாயிலாகவும் உதவிகளை நாடலாம்.

ஐ.எம்.இ.ஐ. எண்ணை சரிபார்ப்பது எப்படி?

புதிய மற்றும் பழைய ஸ்மார்ட்போன்களை வாங்கும் முன் உங்களது ஐ.எம்.இ.ஐ. எண்ணை சி.இ.ஐ.ஆர். இணையதளத்தில் பதிவு செய்து சரிபார்த்து கொள்ளலாம். உங்களது ஐ.எம்.இ.ஐ. எண்ணை ஒரு நோட்டில் எழுதி பாதுகாப்பாக வைப்பது நல்லது. அதன் மூலமே தொலைந்து போன அல்லது திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களை திரும்ப பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

ஐ.எம்.இ.ஐ. எண்ணை எப்படி கண்டறிவது?

நீங்கள் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும்போது அதன் அட்டை பெட்டியில் அந்த எண் இருக்கும். அது மட்டுமின்றி உங்கள் ஸ்மார்ட்போனில் (*#06#) என்ற எண்ணை தொடர்பு கொண்டால் உங்கள் ஸ்மார்ட் போனின் திரையிலேயே ஐ.எம்.இ.ஐ. எண் தெரிந்துவிடும்.

Read Also: காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியவை !
இவ்வாறு சி.இ.ஐ.ஆர். இணையதளத்தின் மூலம் தமிழகத்தை பொறுத்தவரையில் 44 ஆயிரத்து 24 ஸ்மார்ட்போன்கள் பிளாக் செய்யப்பட்டு இருக்கின்றன. 23 ஆயிரத்து 448 செல்போன்களின் தடயங்களை கண்டறிந்துள்ளனர். 5 ஆயிரத்து 120 ஸ்மார்ட்போன்களை மீட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook