குழந்தைகளுக்கு கதைகள் சொல்லுங்கள் -ThaenMittai Stories

குழந்தைகளுக்கு கதைகள் சொல்லுங்கள்

நாம் குழந்தைகளாக இருந்த நாட்களில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், தாத்தா பாட்டி நமக்கு கதை சொல்வது வழக்கம். அதை கேட்டபடியே நாமும் தூங்கி இருப்போம் .ஆனால் அந்த அனுபவத்தை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்திட நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம். அதற்கு பெற்றோராகிய உங்களை தயார்படுத்தும் சிறிய முயற்சி.
Read Also: ஆக்கபூர்வமான சிந்தனை ஏன் அவசியமான ஒன்று ?
மனிதன் உருவான நாளில் இருந்து கதைகளும் உருவாகிவிட்டன. கதைகளை சுமக்காத மனிதர்கள் யாருமே இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கு பின்னும் ஒரு கதை இருக்கும். அந்த கதை வலி நிறைந்ததாகவும், மகிழ்ச்சியானதாகவும், மறக்க நினைப்பதாகவும், மறக்க முடியாதாகவும் இருக்கலாம்.
தனது கதைகளை மற்றொருவருக்கு சொல்வதன் மூலம் தனது கருத்தை, எண்ண ஓட்டத்தை மற்றவரிடம் பகிர்கிறார்கள். இதன் மூலம் தங்களது மனக்கவலை நீங்குகிறது என்றும் நம்புகிறார்கள். கதைகள் என்பவை கற்பனையாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்கிற வரைமுறை இல்லை. கதைகள் என்பவை நாம் நமக்கு நடந்தவற்றையும்,நாம் பார்த்தவற்றையும் சில நேரங்களில் நமக்கு சிறிய வயதில் சொன்ன கதைகளை கூட கொஞ்சம் மறுபடுத்தி சொல்லலாம்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
எனவே கதைகள் என்பவை எங்கோ தூரத்தில் இல்லை, நம்மோடுதான் இருக்கின்றன. அவற்றை கவனிக்க வேண்டும். பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றித்தான் பல கதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. அவற்றை வாசிக்க வேண்டும். வாசித்தபின் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்.
ஏன் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்?
அவர்களையே அந்த புத்தகத்தைபடிக்க வைத்துவிடலாமே என்ற கேள்வி பலருக்கு எழலாம். கதைகள் குழந்தைகளை அவர்கள் பார்த்திராத புதியதோர் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அவர்களின் கற்பனைத் திறனையும் வளர்க்கும். அடுத்தவரை பற்றி திறனையும், கேட்கும் திறனையும், சிந்திக்கும் புரிந்து கொள்ள வழிவகை செய்யும்.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
குழந்தைகளுக்கு கதைகள் சொல்லுங்கள்
நாம் அனைவரும் வாழ்கின்ற சூழலையும், சமூகத்தையும், நம்முடன் பயணிக்கும் எல்லா உயிர்களையும் கதைகள் நமக்கு நேசிக்க கற்று தருகின்றன.எத்தனை கதைகளை குழந்தைகள் கேட்டாலும் ஒரு சில கதைகள் அவர்களோடு ஐக்கியமாகிவிடுகின்றன.
அவர்களது வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாய் மாற்றுகின்ற வேலையையும் கதைகள் செய்கின்றன. எனவே குழந்தைகளுக்கு கதைகளை சொல்லுங்கள். ஒவ்வொரு கதைக்கு பின்னும் ஒரு கருத்து நிச்சயம் இருக்கும். அதில் எந்த கருத்து உங்கள் குழந்தைக்கு தேவையோ அந்த கதையை சொல்லுங்கள்.
Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு
உதாரணமாக உங்கள் குழந்தை பயப்படுகிறது என்றால் தைரியத்தை முன்நிறுத்தும் கதையை சொல்லுங்கள். அந்த கதை உங்கள் குழந்தையின் உள்ளத்துக்குள் சென்று நம்பிக்கையை கொடுக்கும். அதனால் பெற்றோர். கதைகளை வாசிப்பதற்கு ஆர்வம் காண்பிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கதைகளை சொல்லும்போது அவர்களின் ரசனைக்கு ஏற்றபடி சொல்லவேண்டும்.எல்லா கதைகளும் சொல்லலாம்.கதைகள் குழந்தைகளை பக்குவப்படுத்தும்.குழந்தைகள் கதைகளும் கேட்க்கும் அவர்களின் ஆர்வம் அந்த கதையை சுற்றியே இருக்கும். கற்பனையில் அவர்கள் கதையை ஒரு உலகமாக கொண்டு செல்வார்கள். கதை சொல்லும் நேரம் உங்களுக்கு உங்கள் குழந்தைகளுக்கும் இன்னும் நெருக்கத்தை சேர்க்கும்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook