6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா?- ThaenMittai Stories

6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா?

இரவு தூங்க செல்வதற்கு முன்பு செல்போனிலும், சமூக ஊடகங்களிலும் பொழுதை போக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரவு 10 மணியை கடந்த பின்பும் செல்போனில் மூழ்குபவர்களும் இருக்கிறார்கள்.

Read Also: கோடைகாலத்தில் உங்களை குளிச்சியாகவும் | நீரோட்டமாகவும் வைக்கக்கூடிய பழங்கள் | காய்கறிகள்
இரவு 11 மணியை தாண்டிய பிறகுதான் தூங்குவது பற்றி சிந்திக்கிறார்கள். அப்படி தாமதமாக தூங்குவதும், காலையில் அவசர அவசரமாக எழுந்து வேலைக்கு புறப்பட்டு செல்வதும் பலருடைய வாடிக்கையாக இருக்கிறது.

தினமும் இரவு 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், தினமும் 7-9 மணி நேரம் தூங்குவதற்கு பரிந்துரைக்கிறது. ஆனால் நிறைய பேர் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அது தொடர்ந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா? தூங்கும் நேரம் குறைவது நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினைக்கு வழிவகுக்கும். இதய ஆரோக்கியத்தில் கடுமையான நாக்கங்களை ஏற்படுத்தும்.

Read Also: எப்போதுமே தன்னம்பிக்கையோட இருக்கணுமா ?
போதிய தூக்கமின்மை காரணமாக உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் உண்டாகக்கூடும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா?
தூக்கத்தின் போது உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும். குறிப்பாக ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, ரத்த சர்க்கரை அளவுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும்.

Read Also: ஆக்கபூர்வமான சிந்தனை ஏன் அவசியமான ஒன்று ?
“உங்களுக்கு போதுமான தூக்கம் வராதபோது, உங்கள் உடல் அதிக மன அழுத்த ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அதுரத்த நாளங்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைத்துவிடுகிறது. தூக்கத்தின் போது, உங்கள் இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைகிறது. சுவாசம் சீராக நடப்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்த செயல்முறை இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்கவும், அன்றைய நாளின் மன அழுத்தத்தில் இருந்து மீளவும் வழிவகை செய்கிறது. அதேவேளையில் உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காவிட்டாலோ அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லா விட்டாலோ இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். நாளடைவில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும். இதய அமைப்பை சேதப்படுத்தும்” என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

Read Also: இளமையை தக்கவைக்கும் கொரிய பழக்கங்கள் '8 '
6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் வழக்கம் தொடர்ந்தால் இதய நோய் அபாயங்களுக்கு மட்டுமின்றி நீரிழிவு நோய்க்கும் வழிவகுத்துவிடும்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook