தமிழர் வாழ்வின் அங்கமாகத் திகழும் சித்திரையும்.. வேம்பும் அதன் மகிமையும் - ThaenMittai Stories

தமிழர் வாழ்வின் அங்கமாகத் திகழும் சித்திரையும்.. வேம்பும்...

தமிழர்களுக்கு சித்திரை எவ்வளவு சிறப்போ, அவ்வளவு சிறப்பு வெப்ப மரத்ததிற்கும் உண்டு. வேப்பம் பூவானது பாண்டியர்களின் தலையை அலங்கரித்ததும், அவர்களின் சின்னத்தின் குறியீட்டை கொண்டதுமான பெருமைக்குரியது. நிலத்தை ஐவகையாகப் பிரித்த பழந்தமிழர்கள், பொழுதையும் ஆறு வகையாகப் பிரித்தனர். இதில் இளவேனிற் காலத்தின் தொடக்கமாக 'வசந்த காலம்' என்று அழைக்கப்படும் சித்திரை தொடங்குகிறது. இந்த சித்திரை மாதத்தின் தொடக்கம் முதல் ஒவ்வொரு நாளுமே விழாக்களாகவே தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு நாள், பொன்னேர் பூட்டுதல், சித்திரா பவர்ணமி, சித்திரைத் திருவிழா, தேரோட்டம், அம்மன் கோவில் விழாக்கள், வசந்த பஞ்சமி என இம்மாதம் சிறப்பான மாதமாகத் திகழ்கிறது.

இந்த காலத்தில்தான் மாம்பூ, புளியம்பூ, வேப்பம்பூ போன்ற பூக்கள் மலரும். உயிர்கள் ஒன்றோடொன்று கூடிக் குலவி, தம் காதலை வெளிப்படுத்தி தலைமுறை உருவாக்கும் மாதமாகவும் இம்மாதமே அமைகிறது. வேப்பமரம், வேப்பமரத்தின் பட்டை, அதன்வேர், வேப்பங்கொழுந்து, வேப்பங்கொட்டை, வேப்பம்பூ என்று இம்மரம் தன்னை முழுமையாக மனிதர்களுக்குக் கொடுக்கின்றது. தமிழ் மருத்துவத்தில் 4,444 நோய்கள் சுட்டிக்காட்டப்படுகிறது. இவை அனைத்தையும் சரிசெய்யக் கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் அமெரிக்க நாடு வேப்ப மரத்துக்கான உரிமையை தனக்கானதாகக் கொண்டாடியது. பிறகு இந்தியாவிற்கு தான் உரிமை உள்ளது என்பதை வாதாடிப் பெற்றோம். வேப்ப மரத்திற்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும், அதன் பூவிற்கும், சித்திரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்
சித்திரை பிறக்கின்றது. அன்றைய நாளில் வேப்பம்பூ பச்சடி செய்யாத தமிழர்கள் வீடே இருக்காது.வேப்பம்பூ பச்சடி, அறுசுவை கலந்து தயாரிக்கப்படுகிறது. இதில் இனிப்பிற்கு வெல்லம், புளிப்பு சுவைக்கு சிறிது புளி அல்லது மாங்காய், கார்ப்புக்கு பச்சை மிளகாய், உவர்ப்புக்கு சிறிது உப்பு, துவர்ப்பிற்கு கடுகு. கசப்பிற்கு வேப்பம்பூ ஆகியவை சேர்த்து இந்த பச்சடியானது தயாரிக்கப்படுகிறது. சித்திரை பிறக்கப் போகிறது என்றாலே, வேப்பம்பூ பூத்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும். அந்த மணமே நமக்கு கோடை வெயிலை குளுகுளுவென ஆக்கும் தன்மை வாய்ந்தது.
தமிழர் வாழ்வின் அங்கமாகத் திகழும் சித்திரையும்.. வேம்பும் அதன் மகிமையும்
கிருமிநாசினியான வேப்பம்பூவில் கெட்டகிரூமிகள் அனைத்தும் அழிந்துபோகும். வேப்ப மரத்தில் இருந்து பூக்களை நேரடியாகப் பறித்தோ அல்லது தரையில் விழுந்திருக்கும் பூக்களை எடுத்தோ சுத்தப்படுத்தி (நீரில் கழுவி) காய வைத்துக் கொள்ள வேண்டும். இதனைப் பொடியாகவும், பொரித்தும், துவையல் செய்தும், ரசம் வைத்தும் சாப்பிடலாம். வேப்பம்பூ உணவு செரிமானத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. கபம், பித்தம் போன்ற வியாதிகளை சரி செய்வதோடு குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் வேப்பம்பூவிற்கு உண்டு. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் தரவல்லது வேப்பம்பூ. இதன் காரணமாகவோ என்னவோதான் பாண்டியர்கள் போர் மேற்கொண்டு செல்லும்போது, வேப்பம்பூ மாலை அணிந்தனர் போலும், போரில் காயமுற்றால் உடனடி மருந்தாக அதனை பயன்படுத்தி கொள்ளலாம் அல்லவே ?தமிழ் புத்தாண்டு வானியல் மற்றும் அறிவியல் ரீதியாக மிகச்சரியாக கணக்கிடப்பட்டுள்ளது. சூரியன் 12 ராசிகளில் முதலாம் ராசியான மேஷராசியில் நுழையும்போது தொடங்கும் ஆண்டு கடைசி ராசியான மீனா ராசியி வெளியேறும்போது ஒரு ஆண்டின் கால அளவு முடிவடைகிறது. எனவே ஏப்ரல் 14, அதாவது சித்திரை 1 தமிழ் ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

ஆண்டு தொடக்கத்தில் அதிகாலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து கோலமிட்டு, வழிபாட்டு அறையில் மா, பலா, வாழை போன்ற முக்கிய கனிகள், வெற்றிலை, பாக்கு, நெல், நகை போன்ற முக்கிய மங்கள பொருட்கள் வைத்து, அவற்றின் மீது கண் விழிப்பது புனிதமாக கருதப்பட்டது. தமிழ் பங்குனி மற்றும் சித்திரை மாதத்தில் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் அதிகம். அந்த நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நம் முன் பயன்படுத்திய பொருள் வேப்ப இலை மற்றும்மஞ்சள் கலந்த தண்ணீர் ஆகும்.

Read Also: வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை
கோடையில் தோன்றும் அம்மை நோய்க்கு, அதனைத் தீர்க்கும் மாமருந்தாக வேப்ப இலையே பயன்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சித்திரையை நினைவுகூர்ந்து போற்றும் விதத்தில், நம் பிள்ளைகளுக்கு சித்திரைச் செல்வன், சித்திரைச் செல்வி,சித்ரா தேவி, சித்ரா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது போல, சித்திரையொடு நெருங்கிய தொடர்புடைய வேப்ப மரத்தின் பெயரான வேம்பு, வேம்பரசி. வேம்பையன் போன்ற பெயர்களையும் சூட்டிய பெருமைக்குரியவர்கள், நம் முன்னோர்கள்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook