ஆஸ்கார் விருதுக்கு சென்ற இரண்டாவது மலையாளப் படம் - ThaenMittai Stories

ஆஸ்கார் விருதுக்கு சென்ற இரண்டாவது மலையாளப் படம்

உலக அளவில் திரைப்படத் துறைக்கான உயரிய விருதாக 'ஆஸ்கார் விருது' பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க நாட்டு திரைப்பட விருதாக இருந்தாலும், இதில் வெளிநாட்டு திரைப்படங்களுக்கான ஒரு பிரிவும் வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரிவில்தான் கடந்த வருட ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திற்கு, 'நாட்டு நாட்டு.. பாடலுக்கான இசைப்பிரிவில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி, 96-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது.இந்த திரைப்பட விருது விழாவிற்கு, இந்திய திரைப்பட கூட்டமைப்பு சார்பில், சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான விருது பிரிவில், மலையாளத்தில் வெளியான '2018' என்ற திரைப்படம் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
கேரளா மாநிலத்தில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை மையமாக வைத்து வெளிவந்த இந்தத்திரைப்படம், மலையாளத்தில் ரூ.200 கோடியை வசூல் செய்த முதல் படமாகவும் பதிவானது. இந்த நிலையில் இந்தியில் தயாரிக்கப்பட்டு, மலையாளத்தில் டப் செய்யப்பட்ட 'தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்' என்ற திரைப்படமும், தற்போது ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம், அதன் இசைக் கோர்ப்புக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கப் பட்டிருக்கிறது

உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது, 'தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்' திரைப்படம்.இந்தப் படத்தை ஷைசன் பி.ஓசெப் இயக்கியிருக்கிறார். படத்திற்கான கதையை ஜெபால் ஆனந்தன் என்பவர் எழுதியுள்ளார்.கதையின் நாயகியாக மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையான வின்சி அலோஷியஸ் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி வெளியானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம், ராணி மரியர் என்ற கன்னியாஸ்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
ஆஸ்கார் விருதுக்கு சென்ற இரண்டாவது மலையாளப் படம்
கேரளாவில் பிறந்து வளர்ந்த ராணி மரியா என்ற பெண், தன் வாழ்க்கையை இறைப்பணிக்காக அர்ப்பணிக்கிறார். கன்னியாஸ்திரியாக மாறிய அவர், வாழ்வில் வறுமையில் தவிப்பவர்களுக்கும், உரிமைகள் மறுக்கப்படுபவர்களுக்கும் ஆதரவாக நிற்கிறார். இதனால் ஒரு பிரிவினரின் பகையையும் சம்பாதிக்கிறார். ராணி மரியாவை தங்களின் பகையாளியாக கருதும் நபர்கள் ஒன்றிணைந்து, அவரை கொலை செய்வதற்கு, ஏற்கனவே கொலை செயல்களில் ஈடுபட்ட ஒருவரை நியமிக்கின்றனர். அந்த நபர் தகுந்த நேரம் பார்த்து, ராணி மரியாவை கொலை செய்கிறான். இதற்காக அந்த கொலையாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுகிறான்.

ஆனால் இறப்பதற்கு முன் ராணி மரியா, அந்த கொலையாளியிடம் தன்னுடைய அன்பையும் மன்னிப்பையும் தெரிவித்து, அதை அப்படியே செய்யும்படி கூறிவிட்டு இறக்கிறார். எனவே நீதிமன்றத்தில் நிற்கும் கொலையாளியை, ராணி மரியாவின் பெற்றோர் தங்களின் பிள்ளையாக ஏற்றுக்கொள்வதாகவும், அவரை மன்னித்து விடுதலை செய்யும்படியும் நீதிமன்றத்தில்” மன்றாடுகின்றனர்.

Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
இதனால் கல்நெஞ்சம் படைத்த அந்தக் கொலையாளி கண்கலங்கிப் போகிறான். பின்னாளில் அந்தக் கொலையாளி, கிறிஸ்துவ மதத்தில் இணைந்து இறைப்பணியையும், சமூக சேவையையும் தொடருவது போல், 'தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்' படத்தின் கதை அமைந்துள்ளது.

படம் 'சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்' என்ற பிரிவின் ஸ்கார் தகுதிப்பட்டியலில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது படத்தின் மொத்த ஒலியமைப்பு (பின்னணி மற்றும் பாடல்,இசை)பிரிவில் இந்தப் படம் ஆஸ்காருக்கு பிரிவில் இந்த படம் ஆஸ்கருக்கு சென்றுள்ளது.

Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்
இந்த படத்திற்கான இசையை அமைத்தவர், அல்போன்ஸ் ஜோசப் என்பவராவார்.ஏற்கனவே 2018' மலையாளப் படம் ஆஸ்கார் விருதுக்கு சென்றிருக்கும் நிலையில், மீண்டும் மற்றுமொரு திரைப்படம் மலையாளத்தின் வாயிலாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது, கேரள மாநில திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டு மொத்த இந்திய திரைப்படத் துறையினருக்கும், இந்திய ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.

உண்மைக் கதை

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ” புல்லுவாழி என்ற இடத்தில், 1954–ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி பிறந்தவர், ராணிமரியா. இவரது பெற்றோரான எலிஸ்வா வட்டலில்-பெய்லி தம்பதியருக்கு, ராணி மரியாவோடு சேர்த்து 7 பிள்ளைகள்.

Read Also: The Role Of Tamilnadu Freedom Fighters In The India | இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு
ராணி மரியா கல்வியில் சிறந்து விளங்கியதால், பின்னாளில் ஆசிரியையாக பணியாற்றும் வாய்ப்பை பெற்றவர். அதோடு இறைப்பணி மற்றும் சமூக சேவையில் ஆர்வம் ஏற்பட்டதால்,கன்னியாஸ்திரியாக மாறினார். திருச்சபையின் மூலமாக பல்வேறு இடங்களுக்கு இறைப்பணி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்படி அவர் இறுதியாக பணியாற்ற வந்த இடம்தான், மராட்டிய மாநிலத்தில் உள்ள இந்தூர் மறை மாவட்டம். இங்குள்ள மக்களிடம் கல்வியை போதித்த அவர், அவர்களின் வறுமை வாழ்வுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் போராடினார்.

Read Also: The Role Of Tamilnadu Freedom Fighters In The India | இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு
1995-ம் ஆண்டு பிப்ரவரி 25-ந் தேதி அதிகாலையில், பேருந்தில் பயணம் செய்த ராணி மரியாவை, சமந்தர் சிங் என்பர் கத்தியால் குத்தி கொலை செய்தார். ராணி மரியாவின் உடலில் 40 இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. ராணி மரியா இந்தூர் பகுதியில் நில மற்ற ஏழைகளுக்காக போராடியதால், பாதிக்கப்பட்ட சில நில உரிமையாளர்களால் இந்த கொலை நிகழ்ந்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

கொலைக்குற்றவாளியான சமந்தர்சிங்கை ராணி மரியாவின் பெற்றோர் தங்களின் பிள்ளையாக பாவித்து, அவருக்கு தண்டனை வழங்க வேண்டாம் என்றும், மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும்படியும் நீதிமன்றத்தை வேண்டினர்." இதனால் மனம் திருந்திய சமந்தர் சிங், பின்னாளில் ராணி மரியா சேவை புரிந்த, பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையிலேயே தன்னையும் இணைத்துக் கொண்டு இறைப் பணியையும், மக்களுக்கான சேவையையும் தொடர்ந்தார். ராணி மரியா இறந்த பிறகு, அவரது இறைப்பணி மற்றும் சமூக சேவையை பாராட்டி, அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

Read Also: The Role Of Tamilnadu Freedom Fighters In The India | இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook