தொடர்ந்து 'தோல்வியினை' மட்டுமே சந்திப்பவர்கள் எப்படி வெற்றியை அடைவது?

தொடர்ந்து 'தோல்விகளை' சந்திப்பவர்கள் எப்படி வெற்றியை அடைவது?

உங்களுக்கு பல பிரச்சினைகள் நீ அதனை எதிர்த்துப் போராடாத வரைக்கும் அந்த பிரச்சினைகள் எல்லாமே உங்களுக்கு 'தோல்விகளை' மட்டுமே பரிசாக அளிக்கும். நமது இலக்குகள் ஒவ்வொன்றையும் நோக்கி பயணிக்காமல் பிரச்சினைகளுக்காக பயந்து ஓடிக்கொண்டே இருந்தால் கடைசியில் எதிலுமே வெற்றியை பெற முடியாது.
Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு
ஒரு அழகான ஊரில் இளைஞன் ஒருவன் கல்லூரிக்கு சென்று படித்துக் கொண்டு இருந்தான். அவன் படிப்பில் ரொம்ப கெட்டிக்காரன் அது மட்டுமல்லாமல் இலக்கியம், கலை, விளையாட்டுத் துறையிலும் படு கெட்டிக்காரன். ரொம்பவே சுறுசுறுப்பான பையன். அவனுடைய குடும்பம் பரம்பரையாக செல்வ செழிப்பாக இருந்தார்கள். தொடர்ந்து பணக்காரர்களாக வாழ்ந்து வந்தார்கள். அது மட்டுமில்லாமல் அந்த குடும்பம் கல்வியிலும் சிறந்து விளங்கியது.
அந்த மாதிரி குடும்பமே இருந்தாலும், அந்த பையனிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அது என்ன விடயம் என்றால் அவனுக்கு சின்ன வயதில் இருந்தே ரொம்ப ஆசையாக டென்னிஸ் விளையாடுவது தான். அவன் நன்றாகவே விளையாடுவான் - ஒரு திறமையான விளையாட்டு வீரன் ஆவான். அந்த இளைஞனைப் பார்த்து டென்னிஸ் விளையாடுவது எல்லாம் வேண்டாம். நடிப்பு துறைக்கு சென்று நடிகனாக வரலாம் என்று சொன்னார்கள்.
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
ஆகையால் அவன் நடிப்பு பயிற்சியில் ஈடுபடச் சென்றான். அந்த நேரத்தில் கல்லூரியில் ஒரு போட்டி நடக்கிறது. அந்த போட்டி என்னவென்றால் பார்த்தால் நடித்து காட்டுவது தான். அந்த போட்டியில் கலந்துக் கொண்டு பரிசு பெறுகிறான். அவன் அந்த நடிப்புத் துறையையும் விட்டு விலகி கவிதை எழுத ஆசைப்பட்டான். அந்த போட்டியில் அவன் கலந்துக் கொண்டு வென்று பரிசு பெற்றான். அதன் பின்பு அந்த நடிப்புத் துறையையும் விட்டு விலகி கவிதை எழுத ஆசைப்படுகிறான். கவிதை எழுதிப் பார்க்கலாம் என்று போனான் அதுவும் சரியாக இல்லை. அதையும் விட்டு விலகி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
இந்த மாதிரி ஒவ்வொரு துறையிலும் அவன் கலந்துக் கொண்டு வெற்றிகளை குவித்து சாதிக்காமல் வந்து விட்டான். அதுவும் பாதிலேயே சின்ன சின்ன வெற்றியை அடைந்த உடனே வெளியே வந்து விடுகிறான்.இதே போல் எல்லா துறைகளிலும் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தான். அவனுடைய கல்லூரி படிப்பாக இருந்தாலும் சரி வாழ்க்கையாக இருந்தாலும் சரி எதிலுமே சரியில்லை. இதனை நினைத்து அவனுடைய பெற்றோர்கள் ரொம்பவே பயந்தார்கள். உடனே அவனுடைய தந்தை இதை பார்த்து அவனிடம் பேச அழைத்தார்.
Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்
அவனுடைய தந்தை மகனை அழைத்து உனக்கு என்ன பிரச்சனை ஏன் இந்த மாதிரி நடந்து கொள்கிறாய் என்று கேட்டார் . அதற்கு அவன் தன் தந்தையிடம் பதில் சொன்னான். அப்பா என்னால் எந்த வேலையாக இருந்தாலும் சரி , விளையாட்டாக இருந்தாலும் சரி எதிலையுமே சரியாக கவனம் செலுத்த முடியவில்லை இது எனக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது என்று சொன்னான்.ஆகையால் தான் நான் எல்லா துறைகளிலும் முயற்சி செய்து பார்த்தேன். இதுவரைக்கும் எந்த துறையும் எனக்கு வெற்றியாக அமையவில்லை. அதனால் எல்லா துறைகளிலும் முயற்சி செய்து பார்த்து விட்டு அடுத்தடுத்த துறைகளுக்கு சென்று பயிற்சியில் ஈடுபடுகிறேன் என்று சொன்னான்.
அவனுடைய மனதில் இந்த மாதிரி ஆழமான ஒரு கருத்து இருந்தது. இதனை அறிந்த அவனுடைய தந்தை அவனுக்கு ஒரு கதையினை கூறி விளக்கினார். ஒரு காட்டில் புறா ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த புறா தன்னுடைய கூட்டில் ஒரு நாளைக்கு மேல் தங்குவதே இல்லை. ஏனென்றால் ஒரு நாளை கடந்தவுடன் அந்த கூட்டில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. அந்த புறா நினைத்தது, தன்னுடைய கூட்டில் இருந்து தான் துர்நாற்றம் வீசுகிறது என்று நினைத்து ஒவ்வொரு நாளும் தன் கூட்டினைை பிரித்து மாற்றி மாற்றிக் கட்டுகிறது.
Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
ஒவ்வொரு நாளும் இந்த மாதிரி கூட்டினை பிரித்து மாற்றி காட்டுவதால் அது ரொம்பவே சலிப்படைந்து விடுகிறது. அதன் பின் யோசித்தது என்ன செய்வது என்று ஒரு நாள் தன்னுடைய மூத்த புறாவிடம் சென்று ஆலோசனைகளை கேட்டது. அதற்கு அந்த மூத்த புறா சொன்னது துர்நாற்றம் வருவது உன்னுடைய கூட்டிலிருந்து இருந்து வரவில்லை. அது உன் உடம்பில் தான் இருந்து வருகிறது. எத்தனை முறை கூட்டினை மாற்றி கட்டினாலும், உன் உடம்பிலிருந்து வரும் துர்நாற்றம் உன்னோடு மட்டும் தான் வரும் என்று கூறி அந்த புறாவிடம் புரிய வைத்தது. அந்த புறா ஆனது தன்னுடைய கூட்டினைை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து தவறாகவே புரிந்து கொண்டது.

தொடர்ந்து 'தோல்வியினை' மட்டுமே சந்திப்பவர்கள் எப்படி வெற்றியை அடைவது?, ThaenMittai Stories
அந்த மாதிரி புறா நினைக்காமல் உனக்குள் இருக்கும் பிரச்சினைகளை எதிர்த்து போராடினால் தான் வெற்றி கிடைக்கும். உனக்கு வரும் பிரச்சினைகளை நீ எதிர்த்துப் போராடாத வரைக்கும் அது உனக்கு 'தோல்விகளையே' மட்டும் தான் பரிசாக கொடுக்கும். நம் இலக்குகள் ஒவ்வொன்றையும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்காக விட்டு விலகி ஓடிக்கொண்டே இருந்தால் இறுதியில் எந்த செயலிலும் வெற்றி பெற முடியாது என்று கூறி மகனுக்கு புரிய வைத்தார்.
இளைஞர்களே!, நாம் ஒரு செயலில் ஈடுபடும் போதும் அதில் ஏற்படும் தோல்விகளுக்காகவும், பிரச்சினைகளுக்காகவும், அஞ்சி விலகி விடாதே. அந்த ஒரு தோல்விக்காக உன் நினைவை இழந்து விடாதே!. அமெரிக்காவின் 32வது அதிபராக பொறுப்பேற்ற பிராங்கிளின் ரூஸ்வெல்ட் என்பவர் 1933-ம் வருடத்திலிருந்து 1945 வருடம் வரைக்கும் நான்கு முறை ஜனாதிபதி பதவியிலிருந்து சரித்திர சாதனை புரிந்தவர் ஆவார்.

Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
ஆனால் அவரின் இளமைக் காலம் எப்படி இருந்தது என்று பார்த்தால் கடுமையான போராட்டங்களும், தோல்விகளும் நிறைந்து தான் காணப்பட்டது . 1921 இல் அந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அவர்களுக்கு கடுமையான ஒரு பிரச்சனை வந்தது. அந்தப் பிரச்சினையிலிருந்து அவர் மீண்டு வருவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டார். அந்தப் பிரச்சினை என்னவென்றால் அவர் போலியோ நோய் பாதிப்புக்கு உள்ளனர்.
போலியோ பாதிப்பு ஏற்பட்டதால் கை, கால்கள் முடங்கி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார் . அது மட்டுமல்லாமல் ஒரு காலை இழந்து நான்கு சக்கர நாற்காலியில் இருந்தே சுருண்டு சாவோடு விளிம்புக்கே சென்றவர் தான், அமெரிக்காவின் 32வது ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட் ஆவார். ஆனாலும் அவருக்கு ஏற்பட்ட உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நிகழ்ந்து கொண்டிருந்த எந்த தோல்விகளுக்கும், மாற்றத்திற்கும் தன்னை இழந்து விடாமலும் , தன் முயற்சிகளை இயலாமைக்கு விட்டுவிடாமலும் துணிந்து நின்று போராடினர்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
பிராங்கிளின் ரூஸ்வெல்ட் 1928-ம் ஆண்டு மறுபடியும் அரசியலுக்குள் நுழைந்து அமெரிக்கா அதிபர் எனும் சிகரத்தை எட்டி பிடித்தார். அந்த அமெரிக்கா அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்யின் தோல்வி கதைகள் நமக்கு உணர்த்துவது என்னவென்று பார்த்தால் எதையும், எப்போதும் இடையிலேயே விட்டு விடாதே!, விலகி விடாதே!!. அப்பொழுது தான் வெற்றியின் உயர்வை முழுமையாக சுவைத்து மகிழ முடியும்!. நன்றி!!

Related Tags

எப்படி வெற்றியை அடைவது? Motivational Story In Tamil| Motivational Stories In Tamil | Success Story In Tamil | Motivational Story In Tamil For Students | Real Life Motivational Story In Tamil | Short Motivational Story In Tamil |Tamil Motivational Stories | Best Motivational Story In Tamil | Inspirational Stories In Tamil | Inspirational Story In Tamil | Kutty Motivational Story In Tamil | Life Motivational Story In Tamil | Motivation Story Tamil | How To Overcome Fear? | Motivational Kutty Story In Tamil.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook