நகை வடிவமைப்பு படிப்பும் , வழிகாட்டுதலும்
அதிகம் அறியப்படாத படிப்புகளில் ‘ஜூவல் மேக்கிங்' எனப்படும் ஆபரண வடிவமைப்பும் ஒன்று. வித்தியாசமான படிப்பாக கருதப்படும் இது, இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கக்கூடியது. இதுபற்றிய தகவல்களை அனுபவ ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வழங்குகிறார், கமல்.
Read Also: கல்வி, கலைகளில் கலக்கும் இளம் நாயகி!
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவரான இவர், நகை வடிவமைப்பு, நகை டிசைனிங்... துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். மத்திய-மாநில அரசுகள் மூலமாக நடத்தப்படும். பயிற்சி பட்டறைகளில் கலந்து' கொண்டு, ஜூவல் மேக்கிங்' படிப்பு தொடர்பான வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
“20 ஆண்டுகளுக்கு முன்பு நகை பட்டறைகளில், கற்றுக்கொடுக்கப்பட்ட
தொழில்பயிற்சிதான், இப்போது ஜூவல் மேக்கிங் என்ற. படிப்பாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, நகை உருவாக்கம், அழகுபடுத்தும் வேலைகள், கற்களை பொருத்துதல், எனாமலிங், என்கிரேவிங், பாலிஷிங்... போன்ற வேலைகளை எல்லாம், நகை பட்டறைகளில் கற்றுக்கொண்டோம்.
Read Also: சிறந்த தந்தைக்கான 8 குணங்கள் !
இப்போது, இவை அனைத்தையும் பிரத்யேக படிப்பாக கற்றுக்கொடுக்கிறார்கள். இப்படிப்பின் மூலமாக, நகை செய்வதில் தொடங்கி, அதை சந்தைப்படுத்துதல் வரை எல்லாவற்றையும் இதில் தெரிந்து கொள்ளலாம்” என்றவர், ஜூவல் மேக்கிங் இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ற படிப்பு என்கிறார். “குடும்ப தொழிலாக அறிமுகமாகும், ஒரு சில இளைஞர்கள் மட்டும் தான் ஜூவல் மேக்கிங் படிப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள். மற்ற இளைஞர்கள், வழக்கம் போலவே, வணிகவியல், என்ஜினீயரிங், ஐ.டி. தொழில் நுட்பங்களை பயில்கிறார்கள்.
Read Also: 21 நாட்கள் விரதம் இருந்து உடல் எடையை குறைத்த இளைஞர் !
உண்மையில் இது வேலைவாய்ப்பு நிறைந்த துறை. சிறப்பாக சம்பாதிக்கக்கூடிய துறை. தங்கம் சார்ந்த வணிகத்திற்கும், தொழிலுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தங்கத்தின் மதிப்பும், தேவையும் வருடந்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கும் சூழலில், அதுதொடர்பான படிப்புகள் இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து கொடுக்கும்" என்றவர், நகை வடிவமைப்பு டிஜிட்டல் முறையில் நடப்பதை விளக்கினார்.
“கடந்த சில ஆண்டுகளாக நகை தயாரிப்பு டிஜிட்டல் முறையிலும் நடக்கிறது. அதிக கை வேலைப்பாடாகவும் நடக்கிறது. அதனால் நகை தயாரிப்பிற்கு சம்பந்தமில்லாத குடும்ப பின்னணி கொண்ட மாணவர்கள் கூட, கல்வி வாயிலாக டிஜிட்டல் ‘ஜூவல் மேக்கிங்' பற்றி தெரிந்து கொண்டு, டிஜிட்டல் ஜூவல் மேக்கிங் நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். அதேபோல நகை தயாரிப்பை குடும்ப பின்னணியாக கொண்டவர்கள், புதுப்புது தொழில்நுட்பங்களை கல்வி வாயிலாக கற்றுக்கொண்டு, அதை சுய தொழிலாகவும் முயன்று பார்க்கலாம்.
Read Also: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 - ஏ தேர்வுக்கு, தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
நகையை அலங்கரிக்க உதவும் 'டிசைனிங்’ வேலைதான், மிகவும் சுவாரசியமானது. தனித்துவமானது. மோதிரம்,செயின், கம்மல் போன்றவற்றை சுலபமாக செய்துவிடலாம். ஆனால் அதில் ஓவியம் வரைவதும், எனாமல் என்கிரேவிங் அலங்காரங்களை செய்வதும் பாரம்பரியமிக்க சற்றுகடினமான வேலை. அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், சாமி உருவங்களை நகைகளில் அலங்கரிக்க, ஓவியமாக வரைய தமிழ்நாடு முழுக்க குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே இருக்கிறார்கள். இது கொஞ்சம் சிரமமான வேலை என்பதால், அதிகளவிலான தேவை இருக்கிறது. அதனால் ஜூவல் மேக்கிங் படிப்பை தேர்ந்தெடுப்பவர்கள், 'ஜூவல் டிசைனிங்’ துறையில் கவனம் செலுத்தலாம்” என்றவர், நகை வடிவமைப்பு தொடர்பான படிப்பு விவரங்களை பகிர்ந்து கொண்டார்.
“பி.ஏ.ஜூவல்லரி டிசைன், பி.காம். ஜூவல்லரி டிசைன் & டெக்னாலஜி, பி.எஸ்சி. ஜூவல்லரி டிசைன் & மேனேஜ்மெண்ட், பி.பி.ஏ. ஜூவல்லரி டிசைன் & மேனேஜ்மெண்ட், டிப்ளமோ இன் ஜூவல்லரி டிசைன் & டெக்னாலஜி, ஜூவல்லரி டிசைன்: பினிஷிங், பாலிஷிங், எலெக்ட்ரோபிளேட்டிங், ஸ்டோன் ஸ்டெட்டிங், ஜெம்மாலஜி, ஜெம்ஸ்டோன் ஐடென்டிபிகேஷன்… என நிறைய படிப்புகள் இருக்கின்றன.
இவை இந்தியாவின் ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே பட்டப்படிப்பாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக இந்தியன் டைமண்ட் இன்ஸ்டிடியூட் (குஜராத்), ஜெ.கே.டைமண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ஜெம்ஸ் & ஜூவல்லரி (மஹாராஷ்டிரா), ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் ஆப்இந்தியா (மும்பை) உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் வைரம், நவரத்தினம், தங்க நகைகள் குறித்த கல்வியை வழங்கி வருகின்றன. இவற்றில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள இந்தியன் டைமண்ட் இன்ஸ்டிடியூட் ஜூவல் மேக்கிங் கல்வியுடன், நவரத்தினவியல் ஆய்வக சோதனை பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.
Read Also: சுய முன்னேற்றத்திற்கு வழிகாட்டுபவை !
6 மாத டிப்ளமோ படிப்பில் தொடங்கி, 3 வருட பட்டப்படிப்பு வரை இருக்கிறது. அதனால் விரும்பிய படிப்பில் சேர்ந்து படிக்கலாம்” என்றவர், படிப்பு விவரங்களுடன், தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார்."முன்பு நகை தொழில் நடத்துவதற்கும், இப்போது நடத்துவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. 91.6 ஹெச்.யூ.ஐ.டி, பி.ஐ.எஸ். இப்படி நிறைய தரச்சான்றுகளுடன் தான் நகை வடிவமைப்பு தொழில்களை முன்னெடுக்க முடியும். மேலும் ஜி.எஸ்.டி. வரி உட்பட அனைத்தும் இருந்தால் மட்டுமே, நகை தொழில் நடத்த முடியும் என்பதால், நகை தொழில் தொடங்க ஆசைப்படும் இளைஞர்கள், முறையாக திட்டுமிட்டு ஆரம்பிப்பது நல்லது" என்றவர், நகை வடிவமைப்பு மட்டுமன்றி, நகையை அளவிட்டு, தர நிர்ணயம் செய்யும் தொழில்களும் அமோகமாக நடக்கிறது என்ற தகவலுடன் விடைபெற்றார்.